sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உசிலம்பட்டிக்கு பாதாள சாக்கடைமகேந்திரன்(காங்.,) உறுதி

/

உசிலம்பட்டிக்கு பாதாள சாக்கடைமகேந்திரன்(காங்.,) உறுதி

உசிலம்பட்டிக்கு பாதாள சாக்கடைமகேந்திரன்(காங்.,) உறுதி

உசிலம்பட்டிக்கு பாதாள சாக்கடைமகேந்திரன்(காங்.,) உறுதி


ADDED : அக் 07, 2011 02:10 AM

Google News

ADDED : அக் 07, 2011 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி:உசிலம்பட்டிக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவேதே முதல் கடமை என உசிலம்பட்டி நகராட்சி காங்கிரஸ் வேட்பாளர் எம். மகேந்திரன் கூறியுள்ளார்.அவர் கூறியதாவது:உசிலம்பட்டியின் சாக்கடை நீர் அனைத்தும் உசிலம்பட்டி கண்மாய், கவணம்பட்டி ஊரணி, கொங்கபட்டி ஊரணி என நீராதார இடங்களில் சென்றடைகிறது. இதனால் நீர்வளம் பாதிப்படைகிறது. முதல் கட்டமாக பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வந்து சாக்கடை நீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து நீர்ப்பாசனத்திற்கு கொடுக்க திட்டம் கொண்டு வருவேன். அனைத்து வார்டுகளுக்கும் தனித்தனியாக ரேஷன்கடை, கழிப்பறை வசதிகள் செய்து தருவேன். மக்கள் அதிகமாக வந்து செல்லும் உசிலம்பட்டி பஸ்ஸ்டாண்ட் மேம்படுத்தப்படுவதுடன், இங்கு வரும் பொதுமக்களின் வாகனங்கள் நிறுத்த தனியிடம் ஏற்பாடு செய்வேன்.

மின் தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் சோலார் மின்விளக்குகள் 24 வார்டுகளுக்கும் அமைக்கப்படும். தேனி எம்.பி., ஆருண் அவர்களின் உதவியோடு புதிதாக காவலர் குடியிருப்புகள் அமைக்கப்பாடுபடுவேன். தெருக்களில் நகராட்சி மூலமாக போடப்படும் புதிய சாலைகளினால் வீடுகளின் தரைத்தளம் தாழ்ந்தும், சாலை உயர்ந்தும் இருப்பதால் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகின்றது. நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அடுத்து புதிய ரோடுகள் அமைக்கப்படும்போது பழைய ரோட்டை முற்றிலுமாக அகற்றி விட்டு புதிய ரோடு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us