தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சுகாதார நிலையம் மேடு பள்ளமானது தேவை 'அவசர சிகிச்சை'

 சுகாதார நிலையம் மேடு பள்ளமானது தேவை 'அவசர சிகிச்சை'

 சுகாதார நிலையம் மேடு பள்ளமானது தேவை 'அவசர சிகிச்சை'


ADDED : ஜூலை 11, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2026 05:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: பரவை பேரூராட்சி சத்தியமூர்த்தி நகர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 'டைல்ஸ்' கற்கள் சேதமடைந்து, பெயர்ந்துள்ளதால் சிகிச்சைக்கு வருபவர்கள் காயமடைகின்றனர்.

இவ்வளாகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மைய கட்டடம் ரூ.பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.

தற்போது கட்டடத்தில் அனைத்து பகுதி தரைதள 'டைல்ஸ்' கற்கள் பெயர்ந்து மேடு பள்ளமாகி உள்ளது. நடைபாதையாக உள்ளதால் நடந்து செல்பவர்களை தடுக்கி விழச் செய்கிறது.

பா.ஜ., நிர்வாகி ஜெயபாண்டி கூறியதாவது: இப்பிரிவை தரமற்ற முறையில் கட்டி மத்திய அரசின் திட்டம், நிதியை வீணடித்துள்ளனர். இதனால் விபத்தில் சிக்குபவர்களை மதுரை அழைத்துச் செல்லும் நிலை தொடர்கிறது.

உடனடியாக கட்டடத்தை பராமரிக்க அவசர நடவடிக்கை தேவை என்றார்.

மருத்துவமனை நிர்வாகம்: வட்டார மருத்துவ அலுவலர் பயிற்சிக்கு சென்றுள்ளார். கட்டட நிலை குறித்து துறை சார்ந்த அலுவலர்கள், பொதுப்பணித்துறையினர், தொகுதி எம்.எல்.ஏ.,விடம் தெரிவித்துள்ளோம் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us