தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மேற்கு நுழைவு வாயிலில் விரிவாக்கம்  ரயில்வே பொதுமேலாளர் உத்தரவு

 மேற்கு நுழைவு வாயிலில் விரிவாக்கம்  ரயில்வே பொதுமேலாளர் உத்தரவு

 மேற்கு நுழைவு வாயிலில் விரிவாக்கம்  ரயில்வே பொதுமேலாளர் உத்தரவு


ADDED : ஜூலை 11, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2026 05:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயிலில் பயணிகள் எளிதாக வந்து செல்ல விரிவாக்க பணிகளை மேற்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உத்தரவிட்டார்.

மதுரை ஸ்டேஷனில் ரூ.347.47 கோடியில் நவீன வசதிகளுடன் மறுசீரமைப்பு பணிகள் நடக்கின்றன. நேற்று பல்வேறு கட்டுமான பணிகளை பார்வையிட்ட ஆர்.என். சிங், மேற்கு நுழைவு வாயில் பகுதியில் பயணிகள் எளிதாக வந்து செல்ல விரிவாக்க பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். தெற்கு ரயில்வே தலைமை கட்டுமான பொறியாளர் எஸ்.பி.சிங், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, கூடுதல் மேலாளர் பிரசன்னா, மூத்த வர்த்தக மேலாளர் கணேசன், தலைமை வர்த்தக இன்ஸ்பெக்டர் இளநி மணிகண்டன், அதிகாரிகள் உடனிருந்தனர். ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மாலையில் மீனாட்சி அம்மன் கோயிலில் ஆர்.என்.சிங் சுவாமி தரிசனம் செய்தார். இரவு சிறப்பு ரயிலில் கொல்லம் புறப்பட்டுச் சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us