/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிலம்பம், கராத்தேயில் வென்ற மதுரை வீரர்கள்
/
சிலம்பம், கராத்தேயில் வென்ற மதுரை வீரர்கள்
ADDED : அக் 23, 2025 04:20 AM

திருப்பரங்குன்றம்: நிலக்கோட்டையில் நடந்த தென்னிந்திய சிலம்பம், கராத்தே போட்டிகளில் மதுரை கே.கே. ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர்கள் பதக்கங்களை வென்றனர்.
கராத்தே: கட்டா பிரிவில் 6 வயது அபிநந்தன் இரண்டாம் பரிசு, 10 வயது பிரிவில் சாய் சாத்விக் முதல் பரிசு, 11 வயது பிரிவில் விக்னேஷ் இரண்டாம் பரிசு, 12 வயது பிரிவில் அபிமன்யு முதல் பரிசு வென்றனர்.
சிலம்பம்: 8 வயது பிரிவில் அஸ்மிதா இரண்டாம் பரிசு, 9 வயது பிரிவில் தீபிகா முதல் பரிசு, 10வயது பிரிவில் ரஷிகாஸ்ரீ முதல் பரிசு, தஸ்வின் இரண்டாம் பரிசு, 11 வயது பிரிவில் தனிஷ்ராஜ் இரண்டாம் பரிசு, 12 வயது பிரிவில் ரிட்விக் முதல் பரிசு, 13 வயது பிரிவில் சசிதா முதல் பரிசு வென்றனர். வென்ற வீரர்களை மாவட்ட பயிற்சியாளர் முனீஸ்வரன், தலைமை பயிற்சியாளர் கார்த்திக் பாராட்டினர்.