ADDED : அக் 23, 2025 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்ததால் குளிரான சூழல் நிலவுகிறது.
மழை, வெள்ளம் தொடர்பான புகார்களை 0452- 252 0301 அல்லது 1077 என்ற எண்களில் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மழையளவு (மி.மீ.,):
மதுரை வடக்கு 61.7, தல்லாகுளம் 50.8, பெரிய பட்டி 64.2, விரகனுார் 29.4, சிட்டம்பட்டி 57.4, கள்ளந்திரி 81, இடையபட்டி 37, தனியாமங்கலம் 61, மேலுார் 42.2, புலிப்பட்டி 41.6, வாடிப்பட்டி 54, சோழவந்தான் 35, சாத்தையாறு அணை 58, மேட்டுப்பட்டி 64.8, ஆண்டிப்பட்டி 35, உசிலம்பட்டி 21, குப்பணம்பட்டி 15.4, பேரையூர் 15.8, எழுமலை 14.8, கள்ளிக்குடி 12.6.