தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூலை 23, 2026 07:32 PM

ADDED : ஜூலை 23, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2026 07:32 PM ADDED : ஜூலை 23, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூலை 24

கோயில் * ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சித்திரை வீதிகளில் சட்டத் தேர், காலை 8:30 முதல் 8:54 மணிக்குள், புஷ்ப விமானத்தில் பவனி, இரவு 7:00 மணி.

* ஆடி பிரம்மோற்ஸவம் - 4ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், தங்கப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளல், காலை 8:00 மணி, கருட வாகனத்தில் எழுந்தருளல், மாலை 6:15 மணி, கலை நிகழ்ச்சி, இரவு 7:00 மணி.

* ஆடித்திருவிழா: முத்துமாரியம்மன் கோயில், ஊருணிக்கரை, அனுப்பானடி, மதுரை, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, காலை 10:00 மணி.

* கோயில் உற்ஸவம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், புட்டுத்தோப்பு ரோடு, மதுரை, விளக்கு பூஜை, மாலை 6:00 மணி, 8ம் நாள் பூஜை, இரவு 8:00 மணி.

* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.

* ஆடி உற்ஸவ கொடியேற்றம்: சந்தனமாரியம்மன் கோயில், சந்தனம் நகர், கண்ணனேந்தல், மதுரை, காலை 9:00 மணி, காப்பு கட்டுதல், மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு * லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

* திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* பாகவதசப்தாகம்: நிகழ்த்துவோர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

பள்ளி, கல்லுாரி * வேதியியல் மன்ற துவக்க விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், சிறப்பு விருந்தினர்: மதுரை தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் நவநீதகிருஷ்ணன், காலை 10:30 மணி.

* இயற்கை நகர்ப்புற தோட்டக்கலை: மொட்டை மாடி வடிவமைப்பு மற்றும் இட மேலாண்மை குறித்த கருத்தரங்கு: யாதவா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, முன்னிலை: செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், தலைவர் ஜெயராமன், துணை முதல்வர் கிருஷ்ணவேணி, சுயநிதிப்பிரிவு இயக்குநர் ராஜகோபால், சிறப்பு விருந்தினர்: விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லுாரி பேராசிரியர் பெரியகருப்பையா, ஏற்பாடு: நுண்ணுயிரியல் துறை, காலை 10:30 மணி.

பொது * விவசாய குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, பங்கேற்பு: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, காலை 10:00 மணி.

* மடீட்சியாவின் பிரின்ட் அண்ட் பேக் தொழில்துறை கண்காட்சி துவக்க விழா: ஐடா ஸ்கட்டர், மதுரை, தலைமை: தலைவர் செந்திகுமார், துவக்கி வைப்பவர்: டி.என்.பி.எல்., சேர்மன் குமார் ஜெயந்த், சிறப்பு விருந்தினர்கள்: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, மெர்க்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குநர் வின்சன்ட் மெனாசெரி தேவஸ்ஸி, டான்சியா தலைவர் வாசுதேவன், ஏற்பாடு: மாவட்ட குறு, சிறு தொழில்துறை சங்கம், காலை 11:00 மணி.

* திரப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை கூட்டம்: ரயில்வே மண்டபம், மதுரை, தலைமை: கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, ஏற்பாடு: கோட்ட பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் சிவசுந்தரம், மதியம் 3:00 மணி.

விளையாட்டு * ராஜாமணி, கனகமணி அம்மாள் நினைவுக் கோப்பை மாநில அளவிலான ஹாக்கி போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப், காலை 6:30 மணி முதல்.

மருத்துவம் * உலக மூளை தினத்தை முன்னிட்டு சிறப்பு இலவச பரிசோதனை முகாம்: பாரதி இன்பினிட்டி மருத்துவமனை, இலந்தைகுளம், மதுரை, காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.

* முதுகு தண்டுவட மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் அஸ்வின் தீபக் ராஜன், மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை.

கண்காட்சி * அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us