/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் அகன்ற நடைமேம்பாலம்; கடைகள், ஓய்வறைகள் என எல்லா வசதியும் உண்டு
/
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் அகன்ற நடைமேம்பாலம்; கடைகள், ஓய்வறைகள் என எல்லா வசதியும் உண்டு
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் அகன்ற நடைமேம்பாலம்; கடைகள், ஓய்வறைகள் என எல்லா வசதியும் உண்டு
மதுரை ரயில்வே ஸ்டேஷனில் அகன்ற நடைமேம்பாலம்; கடைகள், ஓய்வறைகள் என எல்லா வசதியும் உண்டு
ADDED : ஏப் 19, 2025 06:27 AM

மதுரை; மதுரை ரயில்வே ஸ்டேஷனின் கிழக்கு, மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் முதன்முதலாக 130 அடி அகலத்தில் அரங்கம் போன்ற நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கேயே பயணிகள் தங்களுக்கு தேவையான பொருட்கள், ரயில் டிக்கெட்டுகளை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பழமையான இந்த ஸ்டேஷனை கூடுதல் வசதிகளுடன் நவீனமாக்கும் சீரமைப்பு பணி 2022ம் ஆண்டு முதல் ரூ. 347.47 கோடி மதிப்பீட்டில் துவங்கியது. புதிய கட்டடங்கள், மூன்று மாடி 'பார்க்கிங்' உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
மதுரையின் அடையாளமான மீனாட்சி அம்மன் கோயிலின் கோபுர மாதிரி நுழைவு பகுதியில் வடிவமைக்கப்பட உள்ளது.
பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஸ்டேஷனிற்கு எளிதாக செல்ல சுரங்கபாதை அமைக்கும் பணியும் தீவிர மாக நடந்து வருகிறது. இதுதவிர பார்சல் மட்டும் நடை மேம்பாலத்திற்கு கொண்டு செல்ல பிரத்யேக 'லிப்ட்' வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.
கிழக்கு நுழைவு பகுதியில் அனைத்து வகையான டிக்கெட் பதிவு செய்யும் வசதி, ஏ.டி.வி.ம்., (டிக்கெட் வழங்கும் மெஷின் ), கூடுதலாக பயணிகள் காத்திருப்பு அறை, பொருட்கள் வைக்கும் அறை, அலுவலர்கள் அறை, ஓட்டல், வணிக கடைகளும் கட்டப்பட்டு வருகின்றன.
கிழக்கு, மேற்கு பகுதிகளை இணைக்கும் 130 அடி அகல நடை மேம்பாலம் 'ஏர் கான்கோர்ஸ்' எனும் வசதி முக்கியமானது. திருநெல்வேலி உள்ளிட்ட ஸ்டேஷன்களில் இதுபோன்று அமைக்கப்பட்டு வரும் நிலையில், மதுரையில் இப்பணி முடியும் தருவாயில் உள்ளது.
இதன்மூலம் அகலமான நடை மேம்பாலத்தில் உணவகங்கள், ஓய்வறைகள் என முதல் நடைமேடையில் என்னென்ன வசதிகள் உள்ளதோ அதுபோல் இங்கும் அமைகின்றன. மதுரையை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் இந்த திட்டம் அடுத்தாண்டு பயன்பாட்டிற்கு வரும் என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.