ADDED : ஜூலை 15, 2025 03:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஜூலை 16 முதல் 27 வரை ஜெர்மனியில் நடக்க உள்ள உலக பல்கலை அணிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில் பங்கேற்க இந்திய அணியின் சார்பில் மதுரை அனுப்பானடி ஜெயப்பிரியா பங்கேற்கிறார்.
இதற்கான அணித்தேர்வு புவனேஸ்வரில் உள்ள கே.ஐ.ஐ.டி. பல்கலையில் நடந்தது.
இதில் மதுரை ஜெயப்பிரியா இந்திய மகளிர் அணி சார்பில் தேர்வானார். மகளிர் பிரிவு போட்டியில் 16 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதில் 'சி' பிரிவில் இந்தியா, போலந்து, ஸ்பெயின், பிரேசில் அணிகள் மோதுகின்றன.