/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநில கராத்தே போட்டிமதுரை மாணவர்கள் வெற்றி
/
மாநில கராத்தே போட்டிமதுரை மாணவர்கள் வெற்றி
ADDED : பிப் 13, 2024 04:57 AM

மதுரை : மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் மியாகி வேர்ல்டு கோஜு ரியூ கராத்தே பள்ளி சார்பில் நடந்த மாநில கராத்தே போட்டியில் வென்ற மதுரை மாணவர்களை பாராட்டினர்.
இப்போட்டியில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நாகர்கோவில் உள்பட பல மாவட்டங்களிலிருந்தும் 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மதுரை மாவட்ட மாணவர்கள் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றனர்.
முதல் இடத்தை கேரன் பள்ளி மஹிமா, ஆர்த்தி, பார்க்கவன், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி சுதர்சன், அவர் லேடி பள்ளி நித்திஷ் குமார், கேந்திரிய வித்யாலயா பள்ளி சாய்சரண், ரூபேஷ், புரூடர் கிளவுஸ் பள்ளி சுதீப், செயின்ட் ஜான்ஸ் பள்ளிஹர்சிதா. என்.எம். எஸ்., பள்ளியை சேர்ந்த சந்துரு , ரித்திஸ்ரீ, கே.எம்.ஆர். பள்ளி டாம் குரூஸ் பிரபு முதல் பரிசு பெற்றனர்.
2ம் பரிசு பெற்றவர்கள் கிரேஸ் பள்ளி அஸ்வந்த் , விக்காசா பள்ளி ஹரிஹரன், கேந்திரிய வித்யாலயா பள்ளி யுவீர், வீரஹஜன், எஸ். பி. ஓ. ஏ. பள்ளி சக்தி ஸ்ரீ, 3ம் பரிசு பெற்ற கேரன் பள்ளி திலக்தரன், சம்யுக்தா, தாரிகா, கே.எம்.ஆர். பள்ளி ஜெஸ்வின், ஜெயராஜ் நாடார் பள்ளி ரித்தேஷ் பெற்றனர். கராத்தே பள்ளித் தலைவர் வைரமணி, தலைமை பயிற்சியாளர் பி. ராஜா, பயிற்சியாளர் டி. ராஜா பாராட்டினர்.