/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை கோயில்களில் நாளை நடை அடைப்பு
/
மதுரை கோயில்களில் நாளை நடை அடைப்பு
ADDED : செப் 05, 2025 11:41 PM
மதுரை: நாளை (செப்.,7) சந்திரகிரகணம் இரவு 9:57 மணிக்கு துவங்கி அதிகாலை 1:26 மணிக்கு முடிகிறது. இதையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உபகோயில்களில் மத்திம காலதீர்த்தம், மத்திம கால அபிஷேகம், மத்திம காலசுவாமி புறப்பாடுநாளைகாலை 11:41 மணிக்கு நடைபெறும். மதியம் 12:30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது. செப்.8 முதல் வழக்கம் போல் தரிசனம் நடைபெறும்.
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நாளைமாலை 4:00 மணிக்கு அனைத்து பூஜைகளும் முடிந்து நடை சாத்தப்படும்.செப். 8காலை 6:00 மணிக்கு வழக்கம்போல் நடை திறக்கப்படும்.திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், ஒத்தக்கடை யோகநரசிங்க பெருமாள் கோயிலில் மாலை 6:00 மணியுடன் அனைத்து பூஜைகளும் முடிக்கப்பட்டு நடை சாத்தப்படும். மீண்டும் மறுநாள் காலை 7:00 மணிக்கு வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறும்.
கூடலழகர் பெருமாள் கோயில் நாளை மதியம் 2:00 மணிக்கு கருடசேவை புறப்பாடு முடிந்து மாலை 4:00 மணிக்கு நடைசாத்தப்படும். செப்.8 அதிகாலை 5:30 மணி முதல் நடைதிறக்கப்படும்.