sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை-துாத்துக்குடி புதிய ரயில்பாதை தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவை; கோட்ட மேலாளர் தகவல்

/

மதுரை-துாத்துக்குடி புதிய ரயில்பாதை தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவை; கோட்ட மேலாளர் தகவல்

மதுரை-துாத்துக்குடி புதிய ரயில்பாதை தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவை; கோட்ட மேலாளர் தகவல்

மதுரை-துாத்துக்குடி புதிய ரயில்பாதை தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவை; கோட்ட மேலாளர் தகவல்


ADDED : பிப் 03, 2026 06:06 AM

Google News

ADDED : பிப் 03, 2026 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''மதுரை - துாத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை வழியாக அமையவுள்ள புதிய ரயில்பாதை திட்டம் கிடப்பில் போடப்படவில்லை. நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது,'' என, மதுரையில் நடந்த ரயில்வே பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: இந்நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 7,611 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரைக் கோட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ஓரிருநாளில் அறிவிக்கப்படும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஸ்டேஷன்களில் பிளாட்பாரம் சீரமைப்பு, காத்திருப்பு அறை, ரயில் வருகை, பெட்டிகள் உள்ளிட்ட விவரங்களை வழங்கும் எல்.இ.டி., திரைகள், லிப்ட், குடிநீர், வை-பை, பார்க்கிங் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

காரைக்குடி, சோழவந்தான், மணப்பாறை, ஸ்ரீவில்லிபுத்துார் ஸ்டேஷன்களில் பணிகள் நிறைவுற்று பயன்பாட்டிற்கு வரவுள்ளன. விருதுநகர், பழநி, பரமக்குடி, அம்பாசமுத்திரம், ராஜபாளையம் ஸ்டேஷன்களில் இம்மாதம் இறுதிக்குள் பணிகள் நிறைவு பெறும். 249 'லெவல் கிராசிங்'குகளில் சுரங்கப்பாதை அமைக்க தெற்கு ரயில்வேக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.

மதுரை ஸ்டேஷனில் ரூ.347 கோடியில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளில் 42 சதவீதம் முடிந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி இந்தாண்டு நவம்பரில் பயன்பாட்டிற்கு வரும். ராமேஸ்வரம் ஸ்டேஷனில் ரூ.101 கோடியில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளில் 86 சதவீதம் முடிந்துள்ளன. மார்ச் 31க்குள் பயன்பாட்டிற்கு வரும்.

ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் ரயில் மதுரை - துாத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை வழியாக புதிய ரயில்பாதை திட்டம் குறித்து எவ்வித தகவலும் இல்லை. மொத்தம் தேவைப்படும் 870 ஹெக்டேர் நிலத்தில் 85 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு மீளவட்டான் - மேலமருதுார் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 785 ஹெக்டேர் நிலம் கூடுதலாக தேவைப்படுகிறது. திட்டம் கிடப்பில் போடப்படவில்லை. நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவை.

ராமேஸ்வரத்திற்கு புதிய வந்தே பாரத் ரயில் இயக்க பாதை தயாராக உள்ளது. வாரியம் ஒப்புதல் அளிக்க வேண்டும். ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில்களை இயக்கும் வகையில் முதற்கட்டமாக மானாமதுரை - ராமேஸ்வரம் இடையே 113 கி.மீ., துாரத்திற்கு இரட்டை ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான சர்வே பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 2026 டிசம்பருக்குள் சர்வே பணிகள் நிறைவு பெறும்.

இவ்வாறு தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us