தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை இன்றைய நிகழ்ச்சிகள்

மதுரை இன்றைய நிகழ்ச்சிகள்

மதுரை இன்றைய நிகழ்ச்சிகள்


UPDATED : நவ 11, 2026 03:39 PM

ADDED : நவ 11, 2026 12:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 03:39 PM ADDED : நவ 11, 2026 12:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கந்த சஷ்டி விழா

* யாகசாலை பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 8:30 மணி, சஷ்டி மண்டபத்தில் 'துள்ளி வருவது வேல்' - பக்தி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - செந்தமிழ்க் கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி, மாலை 6:30 முதல், சுவாமி தந்தத்தொட்டி விடையாற்றி சப்பரத்தில் எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தில் ஆறுமுறை வலம் வந்து முடிவில் சிவகங்கை கட்டளைத் தீபாராதனை, இரவு 7:00 மணி.

* யாகசாலை பூஜைகள்: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:30 மணி, சண்முகர் அர்ச்சனை, காலை 10:00 மணி, மாலை 4:00 மணி, காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு, காலை 11:00 மணி, சுவாமிக்கு பஞ்சலிங்க பூஜை, சந்தன அலங்காரம், மாலை 4:00 மணி.

* முருகனுக்கு விசேஷ அபிஷேகம், சிவப்பு சாத்தி அலங்காரம், தீபாராதனை: சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, காலை 10:30 மணி.

* ஸ்கந்த ஹோமம்: தண்டாயுதபாணி சுவாமி கோயில், நேதாஜி ரோடு, மதுரை, அதிகாலை 4:00 மணி, ருத்ர ஜெப அபிஷேக ஆராதனை, அதிகாலை 5:00 மணி, சண்முகர் அர்ச்சனை, காலை 6:00 மணி, சந்தனக்காப்பு அலங்காரம், மாலை 5:00 மணி.

* சிறப்பு அபிஷேகம், ஆராதனை: தங்கமய முருகன் கோயில், விளத்துார், காலை 8:00 மணி முதல்.

* கந்த சஷ்டி பாராயணம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே. நகர், மதுரை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி முதல்.

* சந்தன காப்பு அலங்காரம்: மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மதுரை, லட்சார்ச்சனை, பிரசாதம் வழங்குதல், மாலை 4:00 மணி முதல், யாகசாலையில் சிறப்பு சத்ரு சம்ஹார ஹோமம், மாலை 5:00 மணி முதல்.

* சிறப்பு அபிஷேகம்: காட்டு பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, பாலமுருகனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, காலை 8:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* ராமகிருஷ்ண பரமஹம்சர் - வாழ்வும், வாக்கும்: நிகழ்த்துபவர் - சுவாமி நித்தியானந்தகிரி, 14, பாரதியார் தெரு, சீதாலட்சுமி நகர் பூங்கா அருகில், கலைநகர் 2வது மெயின்ரோடு, மதுரை, ஏற்பாடு: சாயல்குடி ஆதீனம், மாலை 6:30 மணி.

* 'கந்தபுராணம் - திருமுருகன் அவதாரம்' தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - வாரியார் கிருஷ்ணா, சுந்தர நாட்டாமை லக் சனா திருமண மண்டபம், பெரிய ரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 6:15 மணி.

* கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் பாராயணம்: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, சிறப்பு வழிபாடு, மாலை 6:30 மணி.

* 108 மணி நேர ஹரே ராமா மஹா மந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி முதல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us