ADDED : நவ 10, 2026 10:48 PM
மேலூர்: கொட்டகுடி அருண் 31, இன்று (நவ.,10) மேலுார் ஒரு போக பாசன விவசாய சங்கத்தினருடன் சென்று மதுரையில் உள்ள நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாவை சந்தித்தார்.
ஒருபோகம் மற்றும் இருபோகத்திற்கு ஒரே நேரத்தில் தண்ணீர் திறக்க கோரி மனு கொடுத்தனர். பிறகு காரில் மேலுாருக்கு திரும்பினார். சிட்டம்பட்டி டோல்கேட் கடைசி பாதையை சென்றபோது டோல்கேட் ஊழியர்கள் முத்துப்பட்டி ராஜேஷ் 42, சிட்டம்பட்டி செல்வம் 40, லாடனேந்தல் கார்த்திக் 27, உள்ளிட்டோர் காரை வழிமறித்து தகராறு செய்து ஆம்புலன்ஸ் வரும் வழியில் வந்ததாக கூறி அருணை தாக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., சிவகுமார், இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக மூவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லவே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
