தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை நாளைய ( நவ.15)நிகழ்ச்சிகள்

மதுரை நாளைய ( நவ.15)நிகழ்ச்சிகள்

மதுரை நாளைய ( நவ.15)நிகழ்ச்சிகள்


ADDED : நவ 14, 2026 09:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 09:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கந்த சஷ்டி விழா – 6ம் நாள் சூரசம்ஹாரம்

* யாகசாலை பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 6:30 மணிக்குள், சுப்பிரமணியர், வீரபாகு தேவர் வெள்ளியம்பலம் ஒடுக்கம் வகையறா மண்டபத்தில் எழுந்தருளல், காலை 7:00 மணி, சூரசம்ஹாரம், மாலை 4:00 மணி, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மாலை மாற்றியபின் பூச்சப்பரத்தில் வீதியுலா, மாலை 6:00 மணி, சஷ்டி மண்டபத்தில் மதுரை மீனாட்சி சொக்கர் சைவ சமய அறக்கட்டளை சார்பில் திருப்புகழ் இசைநிகழ்ச்சி, மாலை 6:30 மணி, சிவகாசி ஐய்யன் நாட்டியாலயா ஐஸ்வர்யாதேவியின் பரதநாட்டியம், இரவு 8:00 மணி.

* யாகசால பூஜைகள்: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், அதிகாலை 4:30 மணி, குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, காலை 10:00 மணி, வேல் வாங்குதல், மதியம் 3:45 மணி, சூரசம்ஹாரம், மாலை 4:15 மணி, சாந்தாபிஷேகம், அவ்வைக்கு முருகன் நாவல்கனி கொடுத்த வரலாறு சந்தன அலங்காரம், மாலை 6:00 மணி.

* ராஜ அலங்காரம்: மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மதுரை, சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி, சத்ரு சம்ஹார ஹோமம், காலை 9:30 மணி, பூப்பல்லக்கில் புறப்பாடு, மாலை 4:00 மணி, சூரசம்ஹாரம், மாலை 6:30 மணி.

* சண்முகர் அர்ச்சனை: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 மணி, சூரசம்ஹாரம், மாலை 6:00 மணி, சாந்தாபிஷேகம், இரவு 8:30 மணி.

* ஸ்கந்த ஹோமம், விசேஷ அபிஷேகம், தீபாராதனை: சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, காலை 10:30 மணி.

* ஸ்கந்த ஹோமம்: தண்டாயுதபாணி சுவாமி கோயில், நேதாஜி ரோடு, மதுரை, அதிகாலை 4:00 மணி, ருத்ர ஜெப அபிஷேக ஆராதனை, அதிகாலை 5:00 மணி, சண்முகர் அர்ச்சனை, காலை 6:00 மணி, புஷ்பங்கி அலங்காரம், காலை 9:00 மணி, சந்தனக்காப்பு அலங்காரம், மாலை 5:00 மணி, மாசி வீதிகளில் சிறப்பு அலங்காரத்தில் பூச்சப்பரத்தில் சுவாமி புறப்பாடு, இரவு 7:00 மணி.

* பால்குடம் எடுத்தல், பாலாபிஷேகம், அங்கச்சுற்று, விசேஷ பூஜை, சிறப்பு அலங்காரம்: தங்கமய முருகன் கோயில், சிவகங்கை ரோடு, விளத்துார், மாலை 5:00 மணி, அன்னதானம், மாலை 6:00 மணி.

கோயில்

* ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் – சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் ‘சத்தர்ஸனம்’ விளக்கவுரை, காலை 9:15 மணி, சுவாமி சமானந்தரின் தாயுமானவர் சுவாமி பாடல்கள் விளக்கவுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்: நிகழ்த்துபவர் – சுவாமி குணார்ணவானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

* ‘வேலனும் சூரனும்’ – கந்த சஷ்டி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் – சின்னப்பா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* சரணாகதியின் மகிமை: நிகழ்த்துபவர் – டாக்டர் கிருஷ்ணகுமார், 14, பாரதியார் தெரு, சீதாலட்சுமி நகர் பூங்கா, கலைநகர் 2வது மெயின் ரோடு, மதுரை, ஏற்பாடு: சாயல்குடி ஆதீனம், மாலை 6:30 மணி.

* ‘கந்தபுராணம் – சூரசம்ஹாரம், தெய்வானை திருமணம்’ தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் – வாரியார் கிருஷ்ணா, சுந்தர நாட்டாமை லக் ஷனா திருமண மண்டபம், பெரிய ரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 6:15 மணி.

* கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் பாராயணம்: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, சிறப்பு வழிபாடு, மாலை 6:30 மணி.

* 108 மணி நேரம் அகண்ட ஹரே ராமா மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 6:00 மணி.

பொது

* மனுஷ்ய புத்திரனின் ‘உங்கள் மீது நீங்களே இரக்கம் காட்டவில்லை என்றால் இந்த உலகில் வேறு யார் காட்டுவார்கள்’, கலாப்ரியாவின் ‘மோட்ச தீபம்’, சிவபாலன் இளங்கோவனின் ‘தனித்திருக்கும் தலைமுறை’, கவிதாகுமாரின் ‘பக்தியிசை பரப்பிய பாவலர்கள்’, ‘இளையராஜாவின் ரசிகன்’, பாலபாரதியின் ‘காற்றிலாடும் காகிதப் பூக்கள்’ ஆகிய 6 நுால்கள் வெளியீட்டு விழா: மதுரை புத்தகத் திருவிழா சொற்பொழிவு அரங்கம், தமுக்கம் மைதானம், மதுரை, சிறப்புரை: எழுத்தாளர்கள் ஆத்மார்த்தி, நவீனா அமரன், சித்ரா சிவன், தீபா நாகராணி, முருகேச பாண்டியன், கபில் அரசன், ஏற்பாடு: உயிர்மை பதிப்பகம், மதியம் 2:00 மணி.

* அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற ஓய்வு போலீஸ் எஸ்.பி., மணிவண்ணன், செயின்ட் மேரிஸ் பள்ளி தமிழாசிரியர் சந்திரன், திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் சவுந்திர மகாதேவன் ஆகியோருக்கு பாராட்டு விழா: ஓட்டல் பிரேம் நிவாஸ், மேலபெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை, தலைமை: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், முன்னிலை: ஆடிட்டர் சேதுமாதவா, சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், ஏற்பாடு: பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:30 மணி.

* உலக அமைதி வேண்டி 48 நாட்கள் தொடர் மஹா மவுன நிகழ்ச்சி: அறிவுத்திருக்கோயில், பீ.பி.குளம், மதுரை, ஏற்பாடு: மனவளக்கலை மன்றம், காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.

* பள்ளி மாணவர்களுக்கான ஏழிளந்தமிழ் எழுதும் போட்டி: மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டி, காலை 9:00 முதல் 10:00 மணி வரை, 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டி, காலை 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

* 59வது தேசிய நுாலக வார விழா, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான ‘குழந்தைகள் பாதுகாப்பு’ தலைப்பில் பேச்சு, ‘போதை விழிப்புணர்வு’ தலைப்பில் ஓவியப் போட்டிகள்: கிளை நுாலகம், ஒத்தக்கடை, மதுரை, ஏற்பாடு: கிளை நுாலக வாசகர் வட்டம், காலை 9:00 மணி.

விளையாட்டு

* பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள்: பென் மெட்ரிக் பள்ளி, நாகமலை புதுக்கோட்டை, ஏற்பாடு: யூத் கேரம் கிளப், மாவட்ட கேரம் சங்கம், காலை 7:00 மணி.

* முன்னாள் முதல்வர் அண்ணாதுரை மாரத்தான் போட்டிக்கான நெடுந்துார ஓட்டப்போட்டி: ரேஸ்கோர்ஸ், மதுரை, ஏற்பாடு: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 மணி.

கண்காட்சி

* மதுரை புத்தக கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை, கலை பண்பாட்டுத் துறையினரின் கலை நிகழ்ச்சிகள், மாலை 5:00 மணி, ‘இன்பத்தமிழ் இலக்கியங்கள், படித்து மகிழ்வதற்கா? படிந்து வாழ்வதற்கா?’ – பட்டிமன்றம் வழிநடத்துபவர்: நாஞ்சில் சம்பத், தலைமை: போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாலை 6:00 மணி.

* 41வது தேசிய புத்தக கண்காட்சி : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலகோபுரத் தெரு, மதுரை, காலை 9:30 முதல் இரவு 9:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us