தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை இன்றைய நிகழ்ச்சி 14/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 14/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 14/10/2026


UPDATED : அக் 14, 2026 03:56 AM

ADDED : அக் 14, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 03:56 AM ADDED : அக் 14, 2026 12:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நவராத்திரி விழா

* பட்டாபிஷேக அலங்காரம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி, திருக்கல்யாண மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள், மாலை 6:30 மணி.

* சுந்தரவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மாலை 5:10 மணி, திருக்கல்யாண மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள், மாலை 6:30 மணி.

* மாரியம்மன் அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 மணி, பாராயணம், கலை நிகழ்ச்சிகள், மாலை 6:00 மணி முதல்.

* அபிராமி அலங்காரம்: மகா துர்க்கையம்மன் கோயில், சிலைமான், புளியங்குளம், மாலை 6:05 மணி.

* பெருமாள் அலங்காரம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், நேதாஜி ரோடு, மதுரை, மாலை 6:00 மணி, விசேஷ பூஜை, இரவு 10:00 மணி.

* மாணிக்கம் விற்ற லீலை: காசி விஸ்வநாதர் கோயில், தெற்காவணி மூல வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரை வெள்ளியம்பலம் திருப்பரங்குன்றம் ஒடுக்கம் வகையறா தர்ம டிரஸ்ட், மாலை 6:00 மணி.

* கடம்பவன வாசினி அலங்காரம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.

* மீனாட்சி ஊஞ்சல் சேவை அலங்காரம்: சக்தி சந்நியாசி சுவாமி கோயில், புதுராமநாதபுரம் ரோடு, மதுரை, ஏற்பாடு: தனலட்சுமி மகாசபை, மாலை 6:00 மணி.

* ராக்காயி அம்மன் அலங்காரம்: பொன்முனியாண்டி சுவாமி கோயில், பொன்மேனி, மதுரை, மாலை 6:30 மணி.

* அன்னபூரணி அலங்காரம்: நவசக்தி விநாயகர் கோயில், டீன் குடியிருப்பு, மதுரை, மாலை 6:00 மணி, சஹஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:15 மணி.

* தவழ்ந்த கிருஷ்ணன் அலங்காரம்: ராமசுவாமி நவநீத கிருஷ்ண சுவாமி கோயில், ராமாயணச்சாவடி, வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி, திருவாராதனம், இரவு 7:00 மணி.

* கருட வாகன அலங்காரம், லலிதா சஹஸ்ரநாம லட்சார்ச்சனை, சுவாசினி பூஜை: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மற்றும் அம்மன் சன்னதி தெரு, மதுரை, காலை 7:30 மணி, கலை நிகழ்ச்சிகள், மாலை 6:00 மணி முதல்.

* மாரியம்மன் அலங்காரம்: மதுரை நகரத்தார் விடுதி, வடக்கு சித்திரை வீதி, மதுரை, ஏற்பாடு: நகரத்தார் விஜயதசமி விழாக்குழு, மாலை 6:00 மணி.

* அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை: சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம், சஹஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:00 மணி, கீதாபாரதி குழுவினரின் இசை நிகழ்ச்சி, இரவு 7:00 மணி.

* கொலு, அம்மன் அலங்காரம், விளக்கு வழிபாடு, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், கூட்டு வழிபாடு: அறுபத்து மூவர் குருபூஜை மடம், 97, அம்மன் சன்னதி தெரு, மதுரை, ஏற்பாடு: திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.

* ஸ்ரீதேவி மாஹாத்மியம் பாராயணம், புஷ்பாஞ்சலி: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 8:30 மணி, இசை நிகழ்ச்சி, மாலை 5:15 மணி, தேவியின் பெருமை சொற்பொழிவு, மாலை 5:30 மணி, சிறப்பு பஜனை, இரவு 7:00 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பூஜை: சின்மயா மிஷன், டோக் நகர், மதுரை, காலை 6:30 மணி, 'தாயென உமைப் பணிந்தேன்' சிறப்புரை: ஜிதேஷ் சைதன்யா, மாலை 6:30 முதல் இரவு 7:45 மணி வரை.

* கோ பூஜை: காஞ்சி காமகோடி பீடம், முள்ளிப்பள்ளம், சோழவந்தான், காலை 9:00 மணி, கொலுவில் உள்ள காமாட்சி அம்மனுக்கு லலிதா சஹஸ்ரநாம சுவாசினி பூஜை, கன்யா பூஜை, தீபாராதனை, மாலை 6:00 மணி.

* நாராயணீ அலங்காரம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், சொக்கிகுளம், மதுரை, காலை 7:00 மணி, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், லட்சார்ச்சனை, மாலை 5:00 மணி.

* நவராத்திரி கொலு சிறப்பு பூஜை, லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

* காஞ்சி காமாட்சியின் திருத்தொண்டு: கதை சொல்பவர் –- ராமகிருஷ்ணன், பாலாம்பிகை அருட்குடில், திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி.

கோயில்

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* திருவருட்பா: நிகழ்த்துபவர் – விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பொது

*அறிவுசார் சொத்துரிமை, புவிசார் குறியீடு பெற்ற, ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் கீழ் உள்ள தயாரிப்புகளின் சிறப்பு கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, துவக்கி வைப்பவர் : குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா , ஏற்பாடு: தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தொழில் வசதியாக்கல் அமைப்பு (பேம் டி.என்.,) , காலை 10:00 மணி.

* பிரதம மந்திரி சூரிய வீடு தமிழக அரசின் வீட்டுக்கூரை சூரிய சக்தி மின்நிலைய மானிய திட்டம் குறித்த சிறப்பு முகாம்: சமயநல்லுார் கோட்டம்: நாடார் உறவின்முறை மகால், ஊர்மெச்சிக்குளம், உசிலம்பட்டி கோட்டம்: உசிலம்பட்டி செயற்பொறியாளர் அலுவலகம், திருமங்கலம் கோட்டம்: திருமங்கலம் சூர்யா திருமண மண்டபம், மதுரை மேற்கு கோட்டம்: அரசரடி செயற்பொறியாளர் அலுவலகம், மதுரை கிழக்கு கோட்டம்: எஸ்.எஸ்.மகால், ஒத்தக்கடை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* காந்தி ஜெயந்தி விழா: என்.எம்.ஆர்.சுப்பராமன் மகளிர் கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி தலைவர் என்.எம்.ஆர்.கே. ஜவஹர்பாபு, 'மகாத்மா காந்தியை நேசிப்போம் வாசிப்போம் பின்பற்றுவோம்' சிறப்புரை: சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லுாரி உதவிப்பேராசிரியர் தேவி, ஏற்பாடு: காந்தி மியூசியம், காலை 10:30 மணி.

* அப்துல் கலாம் பிறந்தநாள் முன்னிட்டு மாதாந்திர கூட்டம்: எம்.பி.சி., மஹால், மஹபூப்பாளையம், மதுரை, சிறப்பு விருந்தினர்: நேதாஜி தேசிய இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நேதாஜி சுவாமிநாதன், ஏற்பாடு: மதுரை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம், இரவு 7:31 மணி.

பள்ளி, கல்லுாரி

* இன்குபேஷன் மையம் துவக்க விழா: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை விருந்தினர்: தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., தலைவர் சிங்கை ராமச்சந்திரன், முன்னிலை: கலெக்டர் நிஷாந்த்கிருஷ்ணா, கல்லுாரி தலைவர் ஹரி தியாகராஜன், காலை 11:30 மணி.

* 'ஐடியா லேப்' துவக்க விழா: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை விருந்தினர்: தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., தலைவர் சிங்கை ராமச்சந்திரன், முன்னிலை: கல்லுாரி தலைவர் ஹரி தியாகராஜன், காலை 10:00 மணி.

விளையாட்டு

* மதுரை வருவாய் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள், ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: பள்ளிக்கல்வித்துறை, காலை 8:00 மணி.

மருத்துவம்

* இதய மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, இலவச ஆலோசனை வழங்குபவர் – டாக்டர் நிஜாமுதீன், மதியம் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை, இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம், மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us