தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 13, 2026 10:08 PM

ADDED : அக் 13, 2026 10:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 10:08 PM ADDED : அக் 13, 2026 10:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ஓய்வூதியர்களின் பிரச்னைகளை தமிழக அரசு சரிசெய்ய வலியுறுத்தி போக்குவரத்துத்துறை ஓய்வூதியர்கள் நலச்சங்கம் (ரேவா) சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பைபாஸ் ரோடு அரசுப் போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் அழகர் தலைமை வகித்தார். ரேவா அரசு விரைவு போக்குவரத்து செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.

ஓய்வூதியர்களுக்கு போக்குவரத்து கழகங்களில் மருத்துவ காப்பீடு திட்டங்களை அமல்படுத்த வேண்டும். 2026 ஏப்ரல் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்க வேண்டும். இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்க வேண்டும் என இதில் வலியுறுத்தப்பட்டது.

சம்மேளன மாநில தலைவர் பிச்சை, சங்க நிர்வாகிகள் லெனின், அழகர்சாமி, பாலமுருகன், செல்லத்துரை, வாசுதேவன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொருளாளர் ரவி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us