தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை இன்றைய நிகழ்ச்சி 18/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 18/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 18/10/2026


ADDED : அக் 18, 2026 02:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2026 02:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நவராத்திரி விழா

* மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி, திருக்கல்யாண மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள், மாலை 6:30 மணி.

* சுந்தரவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மாலை 5:10 மணி, திருக்கல்யாண மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள், மாலை 6:30 மணி.

* மகிஷாசுரமர்த்தினி: மகா துர்க்கையம்மன் கோயில், சிலைமான், புளியங்குளம், மாலை 6:05 மணி.

* மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், நேதாஜி ரோடு, மதுரை, மாலை 6:00 மணி, விசேஷ பூஜை, இரவு 10:00 மணி.

* மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்: காசி விஸ்வநாதர் கோயில், தெற்காவணி மூல வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரை வெள்ளியம்பலம் திருப்பரங்குன்றம் ஒடுக்கம் வகையறா தர்ம டிரஸ்ட், மாலை 6:00 மணி.

* மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.

* மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்: சக்தி சந்நியாசி சுவாமி கோயில், புதுராமநாதபுரம் ரோடு, மதுரை, விளக்கு பூஜை, ஏற்பாடு: தனலட்சுமி மகாசபை, மாலை 6:00 மணி.

* சமயபுரம் அம்மன் அலங்காரம்: பொன்முனியாண்டி சுவாமி கோயில், பொன்மேனி, மதுரை, மாலை 6:00 மணி, இளங்கோ சாமி குழுவின் இசை நிகழ்ச்சி, மாலை 6:30 மணி.

* துர்க்கை அம்மன் அலங்காரம்: நவசக்தி விநாயகர் கோயில், டீன் குடியிருப்பு, மதுரை, மாலை 6:00 மணி, சஹஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:15 மணி.

* பட்டாபிஷேகம்: ராமசுவாமி நவநீத கிருஷ்ணசுவாமி கோயில், ராமாயணச்சாவடி, வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி, திருவாராதனம், இரவு 7:00 மணி.

* சாமுண்டி அலங்காரம் : சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, கஜலட்சுமி அலங்காரம்: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி தெரு, மதுரை, லலிதா சஹஸ்ரநாம லட்சார்ச்சனை, சுவாசினி பூஜை, காலை 7:30 மணி, மாலை 6:30 மணி.

* மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்: மதுரை நகரத்தார் விடுதி, வடக்கு சித்திரை வீதி, மதுரை, ஏற்பாடு: நகரத்தார் விஜயதசமி விழாக்குழு, மாலை 6:00 மணி.

* அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை: சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம், சஹஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:00 மணி, 'மீனாட்சி நிருத்தியாஞ்சலி' பிரியா குழுவினரின் நடன நிகழ்ச்சி, இரவு 7:00 மணி.

* கொலு, அம்மன் அலங்காரம், விளக்கு வழிபாடு, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், கூட்டு வழிபாடு: அறுபத்து மூவர் குருபூஜை மடம், 97, அம்மன் சன்னதி தெரு, மதுரை, ஏற்பாடு: திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, மாலை 5:00 மணி.

* மஹா சப்தமி: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, துர்க்கைக்கு பூஜை, காலை 7:30 மணி, ஸ்ரீதேவி மஹாத்மியம் பாராயணம், புஷ்பாஞ்சலி: காலை 8:30 மணி, சுவாமி விமோக் ஷானந்தரின் சொற்பொழிவு, மாலை 5:30 மணி, துர்க்கைக்கு சிறப்பு பஜனை, இரவு 7:00 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பூஜை: சின்மயா மிஷன், டோக் நகர், மதுரை, காலை 6:30 மணி, மதுரை லயஷேத்ரா நடனப்பள்ளி வழங்கும் பரதநாட்டியம், மாலை 6:30 மணி.

* கோ பூஜை: காஞ்சி காமகோடி பீடம், முள்ளிப்பள்ளம், சோழவந்தான், காலை 9:00 மணி, கொலுவில் உள்ள காமாட்சி அம்மனுக்கு லலிதா சஹஸ்ரநாம சுவாசினி பூஜை, கன்யா பூஜை, தீபாராதனை, மாலை 6:00 மணி.

* மஹாலட்சுமி அலங்காரம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், சொக்கிகுளம், மதுரை, காலை 7:00 மணி, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், லட்சார்ச்சணை, மாலை 5:00 மணி.

* மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்: பாலாம்பிகை அருட்குடில், திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி, ‘கஜேந்திர மோட்சம்’ கதை சொல்பவர் – ராமகிருஷ்ணன், மாலை 6:00 மணி.

* நவராத்திரி கொலு சிறப்பு பூஜை, லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

* துர்க்கை அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், காலை 10:00 மணி, கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.

* மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்: முத்துமாரியம்மன் கோயில், 3வது தெரு, மோதிலால் மெயின் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

* ராஜ திருக்கோலம், ராமர் பட்டாபிஷேகம்: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் செட்டிய தெரு, மதுரை, மாலை 6:00 மணி.

* சூரசம்ஹாரம் அலங்காரம்: கபாலீஸ்வரி அம்மன் கோயில், மாடக்குளம், மதுரை, மாலை 6:00 மணி.

* கொலு தரிசனம்: பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம், அனுமார் கோயில் படித்துறை ரோடு, சிம்மக்கல், மதுரை, மாலை 5:00 மணி.

* மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்: ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில், எச்.எம்.எஸ்., காலனி, மதுரை, மாலை 6:00 மணி.

கோயில்

* புரட்டாசி திருவிழா: வில்லாயுதமுடைய அய்யனார் முத்தையா சுவாமி கோயில், கோச்சடை, மதுரை, கலை நிகழ்ச்சிகள், மாலை 6:00 மணி முதல்.

பக்தி சொற்பொழிவு

* கல்விக்கடவுள் சரஸ்வதி: நிகழ்த்துபவர் – சுகுமாரி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் – சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் ‘சத்தர்ஸனம்’ விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள், இரவு 7:00 மணி முதல்.

பொது

* மதுரை நகைச்சுவை மன்ற 36வது ஆண்டு விழா: மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை, தலைமை: மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சேதுராமன், முன்னிலை: தலைவர் டாக்டர் குருசங்கர், சிறப்புரை: பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், மாலை 4:00 மணி.

* 'முன்றில் முஞ்ஞை' பல்லுயிர் சூழல் கருத்தரங்கம்: மதுரை பிரம்மஞான சபை, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை, ஏற்பாடு: ஐந்திணை பல்லுயிர் சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை, காலை 10:00 மணி.

* குழந்தைகளுக்கான இலவச மிருதங்கம், ஹார்மோனிய வகுப்புகள்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* ஆசிரியர்களுக்கான மெகா வேலைவாய்ப்பு முகாம்: ராயல் வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி, விளாங்குடி, காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை.

* குப்பை நடை இயக்க பேரணி: உலகத் தமிழ்ச்சங்க வளாகம் முதல் கலெக்டர் அலுவலகம் வரை, மதுரை, துவக்கி வைப்பவர்: துணை மேயர் நாகராஜன், தலைமை: டி.என்.எஸ்.எப்., மாவட்ட தலைவர் ஆண்டனிபால், ஏற்பாடு: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவொளி கிளை, மதுரை வெற்றி பயண பவுண்டேஷன், ஜே.எஸ்.வி., அறக்கட்டளை, காலை 7:00 மணி.

* 'நானே தொடக்கம் நானே முடிவு' கவியரசு கண்ணதாசன் நினைவு தின நிகழ்ச்சி: மதுரை திருவள்ளுவர் மன்றம், பெரியவர் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: மதுரை இலக்கிய பேரவை, சண்சரண் சமூகம், கல்விநல அறக்கட்டளை, காலை 10:30 மணி.

விளையாட்டு

* மாநில அளவிலான 17 வயது ஆடவர், மகளிருக்கான பேட்மின்டன் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ், மதுரை, ஏற்பாடு: மாவட்ட பேட்மின்டன் சங்கம், காலை 8:00 மணி.

* மாணவிகளுக்கான மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 8:00 மணி.

கண்காட்சி

* மடீட்சியாவின் 8வது ஆயுஷ் எக்ஸ்போ 2026 – பாரம்பரிய மருத்துவ கண்காட்சி: மடீட்சியா ஹால், மதுரை, காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை, இலவச மருத்துவ முகாம், காலை 11:00 முதல் மதியம் 2:00 மணி வரை, மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us