sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் இன்று த.வெ.க., மாநில மாநாடு 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்த நிலையில் மாற்று ஏற்பாடு

/

மதுரையில் இன்று த.வெ.க., மாநில மாநாடு 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்த நிலையில் மாற்று ஏற்பாடு

மதுரையில் இன்று த.வெ.க., மாநில மாநாடு 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்த நிலையில் மாற்று ஏற்பாடு

மதுரையில் இன்று த.வெ.க., மாநில மாநாடு 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்த நிலையில் மாற்று ஏற்பாடு


ADDED : ஆக 21, 2025 08:06 AM

Google News

ADDED : ஆக 21, 2025 08:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை பாரபத்தியில் த.வெ.க., 2வது மாநில மாநாடு இன்று (ஆக.21) மதியம் 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கிறது. முதல் நிகழ்வாக 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சித்தலைவர் விஜய் கொடியேற்ற திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று மதியம் 3:00 மணிக்கு கொடிக்கம்பம் நிறுவும் போது, கம்பம் சரிந்ததில் நுாறடி துாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த த.வெ.க., நிர்வாகி ஒருவரின் காரின் மேற்பகுதி இரண்டாக பிளந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

சென்னையில் இருந்து நேற்று மாலை கார் மூலம் மதுரை வந்த விஜய் , மாநாடு நடக்கும் இடத்திற்கு அருகே ஓட்டலில் தங்கினார். முன்னதாக நேற்று காலை மதுரை வந்த அவரது பெற்றோர் ஷோபா, சந்திரசேகர் மாநாட்டு திடலை பார்வையிட்டனர்.

இன்று மதியம் 3:00 மணிக்கு முதல் நிகழ்வாக கட்சி கொடியேற்றுதல், தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி எடுத்தல், கொள்கைப்பாடல் கலைநிகழ்ச்சிகளை தொடர்ந்து விஜய் பேசுவதுடன் இரவு 7:00 மணிக்கு மாநாடு நிறைவு பெறுகிறது.

கொடிக்கம்பம் சரிந்தது மதுரை அருகே பாரபத்தியில், விஜயின் நண்பர் ஒருவரின் 500 ஏக்கர் காலியிடத்தில் மாநாடு பந்தல் அமைக்கும் பணி ஒரு மாதத்திற்கு முன்பே துவங்கப்பட்டது. ஆனால் கொடிக்கம்பம் அமைப்பதற்காக தரைத்தள கான்கிரீட் மேடையை இரண்டு நாட்களுக்கு முன் தான் அமைத்தனர். அது முழுமையாக காய்ந்திராத நிலையில் மேடையின் மீது இரும்பு வால்வுகள், ஸ்குரூக்கள் மூலம் நுாறடி உயர இரும்புக்கம்பம் பொருத்தப்பட்டது. ஸ்குரூக்களை பொருத்திக் கொண்டிருந்த போதே, கான்கிரீட் தளத்தில் இருந்து எடை தாங்காமல் கம்பம் சரிய ஆரம்பித்தது. கம்பத்தில் இருந்து நுாறடி துாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ராமநாதபுரம் நிர்வாகி ஒருவரின் காரின் மீது கம்பத்தின் முன் பகுதி விழுந்தது. இதில் காரின் மேற்புறம் இரண்டாக பிளந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து தற்காலிகமாக மாநாட்டு திடலின் வேறொரு பகுதியில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது.

3500 போலீசார்2500 பவுன்சர்கள் மாநாட்டு பாதுகாப்பு பணிகளில், 3500 போலீசார் ஈடுபட உள்ளனர். தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் 2500 பாதுகாவலர்கள் (பவுன்சர்கள்) மாநாட்டு திடலுக்குள் கண்காணிக்க வரவழைக்கப்பட்டுள்ளனர். பெண்களை கண்காணிப்பதற்கென 500 பெண் பவுன்சர்களும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

மாநாட்டு அரங்கிற்குள் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அமரும் இருபுறத்திலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் 600 டாக்டர்கள் தயாராக உள்ளனர். 45 மினி, பெரிய ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.

மதியம் 3:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும் என்றாலும் ஒரு மணிக்கே தொண்டர்கள் அமர வைக்கப்பட்டு விடுவர். நிழல் கூட இல்லாத கட்டாந்தரையில் தான் அமருவதற்கான பிளாஸ்டிக் சேர்கள் வைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சி முடியும் இரவு 7:00 மணிக்கு பின்பே வெளியேற முடியும் என்பதால் பிஸ்கெட், அரைலிட்டர் குடிநீர் பாட்டில், மிக்சர், குளுக்கோஸ் டப்பா என இரண்டு லட்சம் பைகள் தொண்டர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளன. வெயிலின் தாக்கத்தால் தொண்டர்கள் மயக்கம் அடைந்தால் கார்டியோ, விபத்தில் சிக்கினால் ஆர்த்தோ சிறப்பு நிபுணர்களைக் கொண்ட முகாமில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேர்களுக்கு தடையா மாநாட்டில் 5 லட்சம் பேர் அமருவதற்கான பிளாஸ்டிக் சேர்களை, ஐந்து ஒப்பந்ததாரர்கள் மூலம் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசியல் அழுத்தம் காரணமாக நான்கு ஒப்பந்ததாரர்கள் சேர்களை தருவதற்கு திடீரென கடைசி நேரத்தில் மறுப்பு தெரிவித்தனர். ஒரு ஒப்பந்ததாரரிடம் இருந்து மட்டும் இரண்டு லட்சம் சேர்கள் மட்டும் இறக்கப்பட்டன. இதையடுத்து அவசரமாக கேரள மாநிலத்தில் இருந்து வேறு நிறுவனங்கள் மூலம் சேர்கள் வரவழைக்கப்பட்டன.

திருஷ்டி கழித்து புறப்பட்டார் விஜய்

மாநாட்டில் பங்கேற்பதற்காக, நேற்று காலை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து, தன் காரில் விஜய் புறப்பட்டார். அதற்கு முன், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காருக்கு பூசணிக்காய், எலுமிச்சை பழம் சுற்றி, திருஷ்டி கழிக்கப்பட்டது.

பேனர்கள் அகற்றம்

மதுரை - துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மாநாட்டு திடல் இருப்பதால் நெடுஞ்சாலை முழுவதும் அனுமதியின்றி த.வெ.க., கட்சி பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வரிசையாக கட்டப்பட்டிருந்தன. இதையடுத்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும் என போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சில பேனர்களை மட்டும் கட்சி நிர்வாகிகள் முன்வந்து அகற்றிய நிலையில், நெடுஞ்சாலையில் இருந்த அனைத்து பேனர்களையும் அகற்ற போலீசார் உத்தரவிட்டனர். மாநாட்டுக்கு இடையூறாக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 50 கடைகளை போலீசார் அப்புறப்படுத்தினர்.

பிளக்ஸ் வைத்த மாணவர் பலி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே இனாம் கரிசல் குளத்தை சேர்ந்த காளியப்பன் மகன் காளீஸ்வரன், 19. இவர் பி.எஸ்.சி. விஸ்காம் மூன்றாம் ஆண்டு படித்தார். மதுரையில் இன்று நடக்கும் தமிழக வெற்றி கழக மாநாட்டிற்காக, நேற்று முன்தினம் இரவு 9:50 மணிக்கு காமராஜர் நகரில் பிளக்ஸ் வைக்க இரும்பு குழாய் எடுக்கும்போது டிரான்ஸ்பார்மரில் இருந்து செல்லும் மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள், காளீஸ்வரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us