/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை வீரவசந்தராயர் மண்டபம் புனரமைப்பு டிசம்பரில் நிறைவடையும்: உயர்நீதிமன்றத்தில் தகவல்

ADDED : ஜூலை 30, 2025 06:54 AM
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம் புனரமைப்பு பணி 2025 டிசம்பருக்குள் நிறைவடையும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கோயில் தரப்பு தெரிவித்தது.
மதுரை அப்துல் ரகுமான் ஜலால் 2020ல் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2018ல் தீ விபத்து ஏற்பட்டது. பழமையான வீரவசந்தராயர் மண்டப துாண்கள், கூரை சேதமடைந்தன. அதை சீரமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து கோயில் வாகன நிறுத்த பகுதியில் தற்காலிக தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அங்கு போதிய இடவசதி இல்லை. கோயிலைச் சுற்றிலும் உள்ள பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.
தற்காலிக தீயணைப்பு நிலையத்தை, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில் நிரந்தர கட்டடத்திற்கு மாற்ற வேண்டும். வீர வசந்தராயர் மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார். கோயில் தரப்பு வழக்கறிஞர் சண்முகநாதன்: வடக்கு ஆவணி மூல வீதியிலுள்ள நிரந்தர கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது. வீரவசந்தராயர் மண்டபத்தை புனரமைக்கும் பணி நடக்கிறது. 2025 டிசம்பருக்குள் பணி நிறைவடையும் என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை பைசல் செய்தனர்.