/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிவில் சர்வீஸ் தேர்வில் வென்ற மதுரை இளைஞர்
/
சிவில் சர்வீஸ் தேர்வில் வென்ற மதுரை இளைஞர்
ADDED : ஏப் 23, 2025 04:26 AM

மதுரை : 'மதுரையைச் சேர்ந்த இளைஞர் சங்கர் பாண்டியராஜ் 30, முழுக்க தமிழில் படித்து சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
மதுரை பீபிகுளத்தைச் சேர்ந்த டெய்லர் சுப்புராஜ் மகன் சங்கர்பாண்டியராஜ். சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றுகிறார். நான் முதல்வன் திட்டத்தில் படித்து யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்ற இவர் அகில இந்திய அளவில் 807 வது ரேங்க் பெற்றுள்ளார். வறுமைச் சூழலில் குரூப் 2 வெற்றி பெற்று சென்னையில் பணியாற்றுகிறார்.
அவர் கூறியதாவது:
அருப்புக்கோட்டை அருகே எம்.ரெட்டியபட்டியில் அரசு பள்ளியில் படித்தேன். சென்னையில் கேட்டரிங் சர்வீஸில் பணி, மாணவர்களுக்கு டியூஷன் என பணியாற்றி, அம்மா உணவகத்தில் உண்டு படித்தேன். யு.பி.எஸ்.சி., தேர்வெழுத நான் முதல்வன் திட்டம் கைகொடுத்தது. மாதந்தோறும் ரூ.7500 கிடைத்ததால் வேலைக்கு கூட செல்லாமல் படித்தேன்.
சென்னை அண்ணாநுாலகம், மதுரை கலைஞர் நுாலகத்திலும் புத்தகங்களை படித்தேன். கோவை சபர்மதி குருகுலமும் ஊக்கப்படுத்தினர். யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாரானது, எழுதியது, நேர்முகத் தேர்வு என அனைத்தையும் தமிழிலேயே பங்கேற்று வெற்றி பெற்றேன். எனது ரேங்கிற்கு ஐ.ஆர்.எஸ்., ஆக வாய்ப்புள்ளது. தொடர்ந்து படித்து ஐ.ஏ.எஸ்., கனவை நிறைவேற்றுவேன் என்றார்.

