/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மஹா பெரியவா ஜெயந்தி விழாமதுரையில் 3 நாட்கள் நடக்கிறது
/
மஹா பெரியவா ஜெயந்தி விழாமதுரையில் 3 நாட்கள் நடக்கிறது
மஹா பெரியவா ஜெயந்தி விழாமதுரையில் 3 நாட்கள் நடக்கிறது
மஹா பெரியவா ஜெயந்தி விழாமதுரையில் 3 நாட்கள் நடக்கிறது
ADDED : ஜூன் 06, 2025 02:56 AM

மதுரை: மதுரையில் அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி ஸ்ரீ மஹாபெரியவா சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா ஜூன் 8 முதல் 3 நாட்கள் நடக்க உள்ளது.
முதல்நாள் மதுரை ஆண்டாள்புரம் வசுதாரா குடியிருப்பு வளாகம் விஸ்வாஸ் கருத்தரங்கு கூடத்தில் ஜூன் 8 மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. இதில் பத்து வயது சிறுவன் சென்னை சூரியநாராயணனின் கர்நாடக இசைநிகழ்ச்சி உண்டு. நெல்லை ரவீந்திரன் வயலின், மதுரை கே.நாராயணன் மிருதங்கம், நல்கிராமம் திருமுருகன் மோர்சிங் பக்கவாத்தியம் வாசிப்பர்.
ஜூன் 9, 10 ம் தேதி மதுரை எஸ்.எஸ்.காலனி பிராமண கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. ஜூன் 9ம் தேதி மாலை 6:00 மணிக்கு பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன், 'மஹா பெரியவா எனும் பேரமுதம்' என்ற தலைப்பில் பேசுகிறார்.
ஜூன் 10 ல் காஞ்சி மஹா பெரியவரின் ஜெயந்தி உற்ஸவம் நடக்கிறது. அன்று காலை 7:00 மணிக்கு சிறப்பு ஹோமங்கள் மகன்யாஸம், மஹா பெரியவா விக்ரகம், வெள்ளி பாதுகைக்கு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடக்கிறது.
பின்னர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நாமசங்கீர்த்தன கலைஞர் ஆய்க்குடி குமார், கர்நாடக இசைக்கலைஞர் ரங்கநாயகி, வயலின் கலைஞர் ரவீந்திரன் உட்பட 6 பேருக்கு ஸ்ரீமஹா பெரியவா விருது வழங்கப்படுகிறது.
விருதை சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயகுமார் வழங்க உள்ளார். காலை 11:30 மணிக்கு ஆய்க்குடி குமார் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது. பின்னர் அன்னதானம் நடைபெறும். ஏற்பாடுகளை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்துள்ளார்.