/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பராமரிப்பு இல்லாத அங்கன்வாடி மையம்
/
பராமரிப்பு இல்லாத அங்கன்வாடி மையம்
ADDED : ஆக 10, 2025 03:29 AM

வாடிப்பட்டி: மதுரை மேற்கு ஒன்றியம் அதலை ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையம் பராமரிப்பின்றி சேதமடைந்து வருகிறது.
இங்கு 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். 2020ல் ரூ.1.73 லட்சத்தில் நவீனப்படுத்தி உள்ளனர். ரூ.பல லட்சம் மதிப்பில் கட்டிய அங்கன்வாடி மைய கட்டடம் பராமரிக்கப்படவில்லை. இதனால் கட்டட வெளிப்பூச்சுகள் பெயர்ந்து செங்கற்கள் வெளியே தெரிகின்றன. மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சாய்வு தளம், கைப்பிடிகள் பகுதியும் சேதமடைந்துள்ளன.
இதனால் சிறுவர்கள் விளையாடும் போது காயமடைய வாய்ப்புள்ளது. கழிப்பறை பராமரிக்கப்படவில்லை. இம்மைய குழந்தைகள் நலன் கருதி கட்டடத்தை பராமரிக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.