/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விளைச்சலும் இல்லாமல் போச்சு விலையும் குறைஞ்சி போச்சு மக்காச்சோளம் விவசாயிகள் கவலை

ADDED : பிப் 04, 2024 03:24 AM

பேரையூர் : ''பேரையூர் தாலுகாவில் விளைச்சல் குறைந்ததுடன், விலையும் வெகுவாக குறைந்ததால்'' மக்காச்சோள விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
பேரையூர் தாலுகாவில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் கடந்த ஆடிப்பட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். கனமழையின் காரணமாக மக்காச்சோளப் பயிர்கள் நன்கு வளர்ந்து இருந்தது. நல்ல மகசூல் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் விளை நிலத்தில் தண்ணீர் தேங்கி அறுவடை செய்ய முடியாமல் போனது.
பெரும்பாலான சோளக் கதிர்கள் நீரில் மூழ்கி வீணாகின. மழைநீர் வடிந்து மக்காச்சோளம் அறுவடை பணிகள் பேரையூர், சிலைமலைப்பட்டி, பாப்பையாபுரம், குமாரபுரம், காடனேரி, அரசபட்டி, கூவலப்புரம், மேலப்பட்டி பகுதிகளில் நடந்து வருகிறது. ஆனால் 25 சதவீதம் தான் மகசூல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாயிகள் கூறுகையில், ''மக்காச்சோளப் பயிர்கள் அறுவடை செய்யும் நேரத்தில் மழையில் நனைந்து வீணாகி விட்டது. கடந்தாண்டு ஏக்கருக்கு 20 குவிண்டால் சோளம் கிடைத்தது. இந்தாண்டு 5 குவிண்டால் தான் கிடைத்துள்ளது.
விலையும் கடந்தாண்டு குவிண்டால் ரூ2500க்கு கொள்முதலான, இந்தாண்டு ரூ.2000க்கு வாங்குகின்றனர். இதனால் பெரும் நஷ்டத்தில் உள்ளோம். அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்'' என்றனர்.