நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனை கவியரங்கம் பெண்கள் உலகின் கண்கள் என்ற தலைப்பில் நடந்தது.
தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் இரா. ரவி வரவேற்றார். பொருளாளர் இரா.கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். புரட்சிப்பாவலர் மன்றத் தலைவர் வரதராஜன் விருது வழங்கினார்.
கவிஞர்கள் வரதராஜன், முருகு பாரதி, லிங்கம்மாள், அனுராதா இதயத்துல்லா, ஆறுமுகம், ராமபாண்டியன், பழனி, முனியாண்டி, பொன் பாண்டி, வேல்பாண்டியன், நாகவல்லி கவிதை பாடினர். கவிஞர்கள் ராமபாண்டியன், அனுராதா விருது பெற்றனர். பார்வையாளர்களாக விரிவுரையாளர் அதிவீர பாண்டியன், தலைமையாசிரியர் மோகனக்கண்ணன் பங்கேற்றனர்.

