ADDED : பிப் 02, 2025 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம், : மதுரை அண்ணா நகர் சையது நசீம் 20. கல்லுாரி மாணவர். இவரிடம் குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி சிலர் ஒரு அலைபேசி எண்ணை கொடுத்தனர்.
அதில் தொடர்பு கொண்டபோது ஜன., 31ல் திருமங்கலம் - மதுரை ரோட்டில் ஸ்டேட் வங்கி முன்பு வருமாறு தெரிவிக்கப்பட்டது. நண்பர் அப்துல் பாரிசுடன் அங்கு வந்த சையது நசீம் கர்நாடகா மாநிலம் மைசூரு கிஷ்சான் என்பவரை சந்தித்தார். தங்கத்தை காட்டுமாறு கூற, அந்நபர் திடீரென கத்தியை காட்டி பணம் கேட்டார். சையது நசீம் சத்தமிடவே அருகில் இருந்தவர்கள் கிஷ்சானை பிடித்து திருமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.