ADDED : நவ 22, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஓசூர் வக்கீல் கண்ணன் வெட்டப்பட்டதை தொடர்ந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வாகன சோதனைக்கு பிறகே விசாரணைக்கு ஆஜராகுவோரை நீதிமன்றத்திற்குள் போலீசார் அனுமதிக்கின்றனர். மதுரை சிந்தாமணி முத்துராஜ் என்பவர் வழக்கு ஒன்றில் ஆஜராக டூவீலரில் வந்தார். அவரை சோதனையிட்டதில் ஒரு பொட்டலம் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர்.