/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எம்.ஜி.ஆர்., சிலையை சேதப்படுத்தியவர் கைது
/
எம்.ஜி.ஆர்., சிலையை சேதப்படுத்தியவர் கைது
ADDED : அக் 09, 2025 04:40 AM
அவனியாபுரம் : அவனியாபுரம்-- திருப்பரங்குன்றம் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தற்காலிக வாடிவாசல் அமைக்கப்படும் இடத்தில் இரண்டரை அடி உயரத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர்., சிலை சில தினங்களுக்கு முன்பு சேதப்படுத்தப்பட்டது. சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமையில் 300க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., வினர் மறியலில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சிலையை சேதப்படுத்தியது அவனியாபுரம் அருணகிரிநாதர் கோயில் தெரு மணிமாறன் 31, என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.