/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலி விசா வழங்கி மோசடி செய்தவர் கைது
/
போலி விசா வழங்கி மோசடி செய்தவர் கைது
ADDED : நவ 23, 2025 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே மணியஞ்சி அசோக்குமார் ராஜ் 33. தனியார் நிறுவன ஊழியர். 2023ல் பொதும்பு பஸ் ஸ்டாப் அருகே இ-சேவை மையம் நடத்திய சிக்கந்தர் சாவடி வெங்கடேஷ், பொதும்பு கவிதா, தேனி ஆண்டிபட்டி பால்பாண்டி, பள்ளபட்டி மயில்ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.6.55 லட்சம் வாங்கினர்.
2024 பிப்.,ல் சிங்கப்பூருக்கு பதிலாக ஹாங்காங், கம்போடியா என போலியான விசா, விமான டிக்கெட் வழங்கி மோசடி செய்தனர். பால்பாண்டியை அலங்காநல்லுார் போலீசார் கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.

