ADDED : ஆக 18, 2026 11:13 PM
அ நிறம் | அளவு
அவனியாபுரம்: இலங்கையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணிகளிடம் குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், சிவகங்கை மாவட்டம் தமராக்கி தெற்கு தெருவைச் சேர்ந்த பாண்டியன் 42, என்பவரின் பாஸ்போர்ட்டில் சந்தேகம் ஏற்பட்டது.
மேலும் விசாரணை நடத்தியதில், அவர் பாஸ்போர்ட்டில் தன்னுடைய பிறந்த தேதியை மாற்றி கத்தார் மற்றும் துபாய்க்கு சென்று விட்டு இலங்கை வழியாக மதுரை வந்தது தெரியவந்தது.
குடியேற்றத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரில் அவனியாபுரம் போலீசார் பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
