ADDED : நவ 22, 2025 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: அலங்காநல்லுார் அருகே அ.புதுப்பட்டி பச்சையப்பன் மகன் சங்கிலிக்கருப்பு 24.
இவர் அப்பகுதி ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு காதல் தொல்லை தந்து வந்துள்ளார்.
ஏற்க மறுத்த சிறுமியின் வீட்டு கதவு மீது கற்களை எறிந்து மிரட்டினார். இதனால் பயந்த சிறுமி தற்கொலைக்கு முயன்றார். சிறுமியை காப்பாற்றிய பெற்றோர் சமயநல்லுார் மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்ததை தொடர்ந்து வாலிபர் தலைமறைவானார். போலீசார் தேடுகின்றனர்.

