
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்:  திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர்  லலிதா பரமேஸ்வரி ராஜசியாமளா,  மகா வராகி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த மறுநாள் முதல் நடந்த மண்டல பூஜை நேற்று பூர்த்தி செய்யப்பட்டு மண்டலாபிஷேகம் நடந்தது.
தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள மூலவர்கள் உச்சிஷ்ட கணபதி,  செந்திலாண்டவர்,  மகா வராகி,  ராஜசியாமளா, பாலதிரிபுரசுந்தரி,  லலிதாபரமேஸ்வரி,  காலபைரவர்,  அகஸ்திய முனிவர், முத்து வடுகநாத,  சித்தர் லோப முத்ரா சன்னதிகளில் யாக பூஜை, சண்டி ஹோமம்  முடிந்து கலசாபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

