/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சதுப்புநிலம் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி
/
சதுப்புநிலம் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி
ADDED : பிப் 02, 2025 04:51 AM
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அரசு மியூசியத்தில் உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு பறவைகள் சரணாலயம் மற்றும் ராம்சார் தலங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது. கலெக்டர் சங்கீதா துவக்கி வைத்தார்.
ராம்சார் அமைப்பு உருவான வரலாறு, அதில் இந்தியா உறுப்பினராக இணைந்தது, சதுப்பு நிலங்களுக்கான 9 தகுதிகள் குறித்துகாண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இந்தியாவில் 89 இடங்கள் சதுப்பு நிலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஏ டூ இசட் முறையே அனைத்து மாநிலங்களிலும் உள்ள சதுப்புநிலங்கள், சரணாலயங்கள்குறித்து இங்கு அறியலாம்.
அதிகபட்சமாக தமிழகத்தில் 20 இடங்கள் இருக்கின்றன. கோடியக்கரை, திருவிடைமருதுார் பறவைகள் பாதுகாப்பு மையம், சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட இடங்கள், சதுப்பு நிலத்தின் முக்கியத்துவம், மாசுபாட்டால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. தேவாங்கர் கலைக் கல்லுாரி உதவிப் பேராசிரியர் செல்லபாண்டியன் பேசினார்.
பள்ளி மாணவர்களுக்கு சதுப்புநில தலைப்பில் கட்டுரை, ஓவியப்போட்டி நடந்தது. கண்காட்சியை பிப். 28 வரை தினமும் காலை 10:00 -- மாலை 6:30 மணி வரை பார்வையிடலாம். ஏற்பாடுகளை மியூசிய காப்பாளர் மருதுபாண்டியன் செய்துள்ளார்.