ADDED : ஜூன் 11, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் மூக்கையாத்தேவர் மணிமண்டபம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் அரசு பள்ளி, விடுதி கட்டடங்கள் உள்ள பகுதியில் நேற்று அமைச்சர் மூர்த்தி, எம்.பி., தங்கதமிழ்செல்வன், கலெக்டர் சங்கீதா ஆய்வு செய்தனர்.
அங்கு வந்த இந்திய மக்கள் பா.பி., கட்சியினர் நேதாஜி என்பவர் தலைமையில், 'இந்த இடம் கள்ளர் பொது நிதிக்கு உட்பட்டது. கல்விக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும். மேலும், போக்குவரத்துக்கு வசதியில்லாமல் உள்ளது. வேறு இடம் தேர்வு செய்ய வேண்டும்' என்றனர். அவர்களிடம் 'நீதிமன்றம் சென்று தீர்வு காணுங்கள்' என அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து எதிர்ப்பு தெரித்தவர்களை டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சமரசம் செய்தனர்.