/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மஞ்சமலை கோயில் புரவி எடுப்புக்கு பிடிமண்
/
மஞ்சமலை கோயில் புரவி எடுப்புக்கு பிடிமண்
ADDED : பிப் 12, 2025 04:27 AM
பாலமேடு : வலையப்பட்டி மலை அடிவார பகுதியில் மஞ்சமலை சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் புரவி எடுப்பு விழா 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்.
8 ஆண்டுகளுக்கு பின் நடக்க உள்ள விழாவுக்கு வலையப்பட்டி கோயில் வீட்டில் இருந்து ஜமீன்தாரிடம் பிடிமண் கொடுக்கும் பாரம்பரிய நிகழ்வு நேற்று நடந்தது.
மந்தையில் கூடிய பொதுமக்கள் வாண வேடிக்கை, மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து பிடிமண் வழங்கினர். பின் குதிரை, சுவாமி உள்ளிட்ட சிலைகள் செய்யும் வேளாளரிடம் பிடி மண் வழங்கப்பட்டது.
இப்பணிகள் முடிந்த பின் முகூர்த்தக்கால் நடப்பட்டு விழா நடக்கும் என வலையபட்டி, அரசம்பட்டி, புதுார், சல்லி கோடாங்கிபட்டி, லக்கம்பட்டி கிராம மக்கள் தெரிவித்தனர்.

