/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்து கோயிலில் மண்பானை பொங்கல் படையல்
/
குன்றத்து கோயிலில் மண்பானை பொங்கல் படையல்
ADDED : ஜன 15, 2024 11:54 PM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப் பொங்கலை முன்னிட்டு, சுவாமிகளுக்கு மண் பானையுடன் பொங்கல் படைக்கப்பட்டது.
கோயில் மடப்பள்ளியில் மண்பானைகளில் பொங்கல் தயாரித்து மூலவர்கள் சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்களிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில் பானையுடன் படைக்கப்பட்டு பூஜை, தீபாராதனை நடந்தது.
பின்பு உற்ஸவர்கள் சுவாமி, தெய்வானை முன்பு படைக்கப்பட்டது. மண் பானையில் பொங்கல் வைத்து பானையுடன் சுவாமிக்கு படைக்கப்படுவது ஆண்டுக்கு ஒரு முறை தைப் பொங்கல் அன்று மட்டுமே.
திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் மூலவர்கள் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகன், ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு வெள்ளிக் கவசங்கள் சாத்துப்படியாகி பொங்கல் படைத்து பூஜை நடந்தது.