/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பு; வெடி பொருட்கள் பறிமுதல்
/
அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பு; வெடி பொருட்கள் பறிமுதல்
அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பு; வெடி பொருட்கள் பறிமுதல்
அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்பு; வெடி பொருட்கள் பறிமுதல்
ADDED : ஜன 30, 2024 07:32 AM

பேரையூர் : மதுரை மாவட்டம் பேரையூர் அருகே தரிசு நிலங்களில் அரசு அனுமதி இன்றி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரை கண்டதும் நில உரிமையாளர், ஊழியர்கள் தப்பினர்.
பேரையூர் தாலுகா முருகனேரியில் செங்குளத்தைச் சேர்ந்த தெய்வமுனி, வரதராஜூக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் கருவேல மரங்கள் முளைத்து தரிசாக உள்ளது. இந்நிலத்தில் நான்கு மாதங்களாக அரசு அனுமதி இன்றி பட்டாசுகள் தயாரித்து வருவதாக போலீசாருக்கு புகார் சென்றது.
டி.எஸ்.பி., இலக்கியா மற்றும் போலீசார் அங்கு சென்ற போது பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் நில உரிமையாளர் தப்பி விட்டனர்.
அந்நிலத்தில் இருந்த தகர கொட்டகையில் வெடி மருந்துகள் இருந்தன. இந்த வெடி மருந்தை எடுத்து திறந்தவெளி கருவேல மரங்களின் அடியில் பட்டாசுகளை தயாரித்து வந்துள்ளனர். அங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்தது தெரிந்தது.
வருவாய்த்துறையினரும் போலீசாரும் வெடி மருந்துகள், பேன்சி ரக பட்டாசு தயாரிப்புக்கான பொருட்களை பறிமுதல் செய்தனர். தப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதே பகுதியில் கடந்தாண்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியானார்.