/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜி.எஸ்.டி., வரி சட்டத்தில்இரண்டே வரிவிகிதம் தானா தயாரிப்பாளர்கள், வணிகர்கள் அச்சம்

ADDED : ஜூன் 15, 2025 05:38 AM
மதுரை : ஜி.எஸ்.டி., வரி சட்டத்தில் 5 சதவீதம், 18 சதவீதம் என 2 வரிவிகிதம் மட்டும் கொண்டு வரப்படும் என்ற தகவலால் தயாரிப்பாளர்கள், வணிகர்கள் அச்சத்தில் உள்ளனர். மத்திய நிதி அமைச்சகம் இதை தெளிவுபடுத்தவேண்டும் என தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
தலைவர் வேல்சங்கர், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம் கூறியதாவது: ஜி.எஸ்.டி.,யில் வரிவிலக்கு (ஜீரோ) தொடங்கி 3 சதவீதம், 5, 12, 18, 28 சதவீதம் என வரி விகிதங்கள் நடைமுறையில் உள்ளன. ஏற்கனவே அதிக வரி என குறிப்பிடப்பட்ட பொரிகடலை, கடலைமிட்டாய்க்கு 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் தீப்பெட்டிக்கு 18ல் இருந்து 12 சதவீதமாக வரி குறைக்கப்பட்டது. மத்திய அரசுக்கும் அதிக நிதி கிடைத்துள்ளதால் வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக பார்லிமென்ட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 5, 18 சதவீத வரி விகிதம் மட்டுமே செயல்படுத்தப்படும் என தகவல் பரவுகிறது. இதனால் கூடுதல் வரி செலுத்தக்கூடும் என்ற அச்சத்தில் வணிகர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளனர். மத்திய நிதியமைச்சகம் சார்பில் இதுகுறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்றனர்.