sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை அரசு மருத்துவமனை சிகிச்சையில்  கடியும், வெடியும் அதிகம்; வாய்ச்சண்டையில் காது, மூக்கு துண்டாவதால்

/

மதுரை அரசு மருத்துவமனை சிகிச்சையில்  கடியும், வெடியும் அதிகம்; வாய்ச்சண்டையில் காது, மூக்கு துண்டாவதால்

மதுரை அரசு மருத்துவமனை சிகிச்சையில்  கடியும், வெடியும் அதிகம்; வாய்ச்சண்டையில் காது, மூக்கு துண்டாவதால்

மதுரை அரசு மருத்துவமனை சிகிச்சையில்  கடியும், வெடியும் அதிகம்; வாய்ச்சண்டையில் காது, மூக்கு துண்டாவதால்


ADDED : டிச 27, 2025 06:05 AM

Google News

ADDED : டிச 27, 2025 06:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னையை அடுத்து மதுரை அரசு மருத்துவ மனையில் தான் ஒட் டுறுப்பு அறுவை சிகிச்சை துறை தொடங்கப்பட்டது. மாதந்தோறும் வாகன விபத்து, பட்டாசு விபத்து, சண்டைகளால் ஏற்படும் விபத்து போன்றவற்றால் காயம்பட்டு 900 முதல் 1000 பேர் வரை அனு மதிக்கப்படுகின்றனர்.

கடியால் அங்கஹீனம்

மூக்கு, காது இரண்டுமே அங்கக் குறைபாடாக பார்க்கப்படுவதால் ஒட் டுறுப்பு அறுவை சிகிச்சை செய்வது அவசியமாகிறது என்கிறார் துறைத்தலைவர் டாக்டர் அறம். அவர் கூறியதாவது:

சண்டையின் போது மூக்கு, காதை கடித்து துப்பும் நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகின்றன. மூக்கின் நுனியை கடித்துத் துப்பும் போது முனைப்பகுதியில் அங்கஹீனம் ஏற்படுகிறது. மாதம் 3 அல்லது 5 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர்.

கன்னத்து சதையில் இருந்தோ நெற்றிப் பகுதி யில் இருந்து சதை எடுத்தோ துண்டான மூக்கின் நுனியில் வைத்து ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. முகத்தின் நிறமும் உடல், கை, கால்களின் நிறமும் மாறுபடுவதால் முகத்தில் இருந்தே சதை எடுக்கப்பட்டு பொருத்தப்பட்டு ரத்தஓட்டம் சரிசெய்யப் படுகிறது.

சண்டையில் காது மடலை கடித்து துண்டாக்குவது, விபத்தில் ஒரு பக்கமாக சரிந்து ரோட்டில் விழும் போது காது முழுவதும் தேய்ந்துவிடும் சம்பவங்களில் காதுமடல் பாதிக்கப்படுகிறது. நெஞ்சு பகுதியில் உள்ள விலா எலும்பின் சிறு பகுதியை எடுத்து காது போன்று செதுக்கி குருத்தெலும்பாக மாற்றி அதற்கு மேல் சதை வைத்து காதை புதிதாக உருவாக்கலாம்.

அஜாக்கிரதையால் ஏற்படும் விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். வீட்டில் விளையாடும் போது வெந்நீர், சூடான சாம்பார், ரசம் போன்றவை கை, கால், முகத்தில் படுவதால் தீக் காயம் ஏற்படுகிறது. வெளியில் விளையாடும் போது கார், டூவீலரில் மோதி அடிபடுகின்றனர்.

பட்டாசு விபத்தில் கைகளே அதிகம் பாதிக்கப்படுகிறது. பட்டாசு வெடிக்கவில்லை என்று கருதும் சிறுவர்கள் புஸ் வாணத்தின் அருகில் சென்று பார்க்கும் போது முகத்தில் தீக்காயம் படு வதற்கு வாய்ப்புள்ளது.

திருவிழா, துக்க நிகழ்வு களில் இளைஞர்கள் பட்டாசை கையில் வைத்து வெடிப்பதால் தீக்காயம் ஏற்படுகிறது. தினமும் 3 பேர் வரை கையில் தீக்காயத்திற்கு சிகிச்சை பெற வருகின்றனர். பாதிப்பின் தன்மை அதிகமானால் விரல்கள் துண்டாகும் வாய்ப்பும் உள்ளது.

காது, மூக்கு கடிபடு வதும் கையில் வெடியை வைத்து தீக்காயம் படுவதும் தவிர்க்கக்கூடிய நிகழ்வுகள். இளைஞர்கள் பட்டாசுகளை தரையில் வைத்து வெடித்தால் கை இழப்பை தவிர்க்கலாம் என்றார்.






      Dinamalar
      Follow us