UPDATED : அக் 25, 2026 05:26 PM
ADDED : அக் 25, 2026 05:24 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மது, புகை, போதை உள்ளிட்ட சமூக தீமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது.
மாநில துணைத் தலைவர் தாவூத் கைசர் தலைமை வகித்தார். மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகம் முன் தொடங்கி, ஆவின் பால்பண்ணை, வக்பு வாரிய கல்லுாரி வழியாக ராஜா முத்தையா மன்றத்தில் நிறைவுற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்று பங்கேற்றனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாவட்ட தலைவர் அம்ஜத்கான், செயலாளர் ஜாகிர் உசேன், பொருளாளர் மன்சூர் அஹமத், துணைத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன், துணைச் செயலாளர்கள் அசன் பாட்ஷா, அப்துல்லாஹ், முகம்மது ஷமீர், சாகுல் ஹமீது, அபுபக்கர் சித்தக் ஆகியோர் பங்கேற்றனர்.
