UPDATED : அக் 31, 2026 11:44 PM
ADDED : அக் 31, 2026 05:54 PM

அ நிறம் | அளவு
மேலுார்: மதுரை மாவட்ட போலீஸ் சார்பில் மேலுாரில் 'நம்ம மதுரை நம்ம போலீஸ்' என்பதை வலியுறுத்தும் 5 கி.மீ., மாரத்தான் போட்டி நடந்தது.
எஸ்.பி தேவநாதன் துவக்கி வைத்து போட்டியில் பங்கேற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு டி.எஸ்.பி. சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ., வேங்கையன், தாலுகா ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் பாலகிருஷ்ணன், ஜாஸ் பள்ளி தாளாளர் ஜெயந்த் வேதசாம் ஆகியோர் பரிசு, மரக்கன்றுகளை வழங்கினர். போலீஸ் மற்றும் மக்களிடையே நல்லுறவை மேம்படுத்தவும், விளையாட்டில் இளைஞர்கள் கவனம் செலுத்தவும் போட்டி நடத்தப்பட்டது.
