/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கடல்சார் முன்பயிற்சி வகுப்பு துவக்க விழா
/
கடல்சார் முன்பயிற்சி வகுப்பு துவக்க விழா
ADDED : ஆக 05, 2025 06:52 AM
மதுரை, : மதுரை ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்ஸில் (ஆர்.எல்.ஐ.என்.எஸ்.,) எலக்ட்ரோ டெக்னிக்கல் ஆபீசர் (இ.டி.ஓ.,) கடல்சார் முன் பயிற்சி வகுப்பு துவக்க விழா மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வணிக கப்பல்களில் எலக்ட்ரோ டெக்னிக்கல் அதிகாரியாக விரும்புவோருக்கு எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜி., (இ.இ.இ.,) பட்டதாரிகள், டிப்ளமோ பெற்றவர்களுக்காக கப்பல் இயக்குநகரத்தால் அங்கீகரிக்கப்பட்டது இந்த நான்கு மாத கடல்சார் முன் பயிற்சி படிப்பு.
இப்படிப்பின் 22வது பேட்ச் துவக்க விழாவில் ஆர்.எல்.ஐ.என்.எஸ்., முதல்வர் பாலன் முத்துராமலிங்கம் வரவேற்றார். பாடத் திட்டம், தேர்வு குறித்து கல்வி ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் பேசினார்.
படிப்பு எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்து வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் சந்திரன் மூர்த்தி விளக்கினார். மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.