/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆரப்பாளையத்தில் தியாகிகள் நினைவு துாண்: மேயர் சிறப்பு தீர்மானம்
/
ஆரப்பாளையத்தில் தியாகிகள் நினைவு துாண்: மேயர் சிறப்பு தீர்மானம்
ஆரப்பாளையத்தில் தியாகிகள் நினைவு துாண்: மேயர் சிறப்பு தீர்மானம்
ஆரப்பாளையத்தில் தியாகிகள் நினைவு துாண்: மேயர் சிறப்பு தீர்மானம்
ADDED : பிப் 16, 2024 05:35 AM
மதுரை: 'மதுரை ஆரப்பாளையம் ரவுண்டானாவில், பெருங்காமநல்லுாரில் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் நினைவு துாண் அமைக்கப்படும்' என மேயர் இந்திராணி பொன்வசந்த் கவுன்சிலர்கள் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.இதுதொடர்பாக அ.தி.மு.க., சார்பில் எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா தொடர்ந்து வலியுறுத்தினார். தி.மு.க., சார்பில் கவுன்சிலர் ஜெயராம் உள்ளிட்ட கூட்டணி கட்சி கவுன்சிலர்களும் மேயரிடம் மனுக்கள் அளித்தனர்.
பிப்.,13ல் நடந்த மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் தியாகிகள் நினைவு துாண் அமைப்பது தொடர்பான சிறப்பு தீர்மானத்தை மேயர் கொண்டுவந்தார். அத்துடன் பழங்காநத்தத்தில் ரூ.74 லட்சத்தில் அமைந்த மாநகராட்சி பூங்காவிற்கு கலைஞர் நுாற்றாண்டு நினைவு பூங்கா என பெயர் வைக்கப்படும் அந்த தீர்மானத்தில் மேயர் குறிப்பிட்டார். சிறப்பு தீர்மானத்திற்கு அனைத்து கட்சி கவுன்சிலர்களும் நன்றி தெரிவித்தனர்.