ADDED : அக் 28, 2025 04:00 AM
சோழவந்தான்: சோழவந்தான் பஸ் ஸ்டாண்ட் அருகே மருது பாண்டியர் 224 வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவர்களது உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க., சார்பில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமையில் மாலை அணிவித்தனர். ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் முன்னிலை வகித்தார். நகர் செயலாளர் சத்யபிரகாஷ், சேர்மன் ஜெயராமன், துணைச் செயலாளர் ஸ்டாலின் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., சார்பில் ஜெ., பேரவை நிர்வாகி ராஜேஷ் கண்ணா தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நகர் செயலாளர் முருகேசன், முன்னாள் சேர்மன் முருகேசன், மகளிர் அணி லெட்சுமி, கிளைச் செயலாளர் ராஜபாண்டி, வழக்கறிஞர் காசிநாதன் பங்கேற்றனர்.
முள்ளிப்பள்ளத்தில் அகமுடையார் உறவின்முறை அறக்கட்டளை சார்பில் மரியாதை செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் தெய்வேந்திரன், பொருளாளர் முத்துக்குமார், முன்னிலை வகித்தனர். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிர்வாகிகள் மார்நாட்டான், ராஜா, கணேசன், ரவி பங்கேற்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் முக்தீஸ்வரன் தலைமையில் மாலை அணிவித்தனர்.

