/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அலங்காநல்லுாரில் மார்க்சிஸ்ட் மாநாடு
/
அலங்காநல்லுாரில் மார்க்சிஸ்ட் மாநாடு
ADDED : நவ 12, 2024 05:21 AM
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் முடுவார்பட்டியில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு ஒன்றிய குழு உறுப்பினர்கள் தவமணி, கவுசல்யா, பஞ்சாட்சரம் தலைமையில் நடந்தது.
மாநாட்டுக் கொடியை வேலுச்சாமி ஏற்றினார். ஒன்றிய குழு ஆறுமுகம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.
கிளைச் செயலாளர் பாண்டியன் வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் பாலா துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உமா மகேஸ்வரன், ஜீவானந்தம் பேசினர்.
புதிய ஒன்றிய செயலாளராக தவமணி, 11 ஒன்றிய குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை இயக்கவும், சாத்தையாறு அணையை துார்வாரவும், கலை கல்லுாரி அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றியக் குழு உறுப்பினர் ஸ்டாலின் குமார் நன்றி கூறினார்.