ADDED : நவ 19, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் புறநகர் மாவட்ட மாநாடு நடந்தது. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ், வெங்கடேசன் எம்.பி., மூத்த தலைவர் ராமகிருஷ்ணன் உட்பட 250 பேர் பங்கேற்றனர்.
கூடல்நகர் ரயில்வே ஸ்டேஷனை இரண்டாவது முனையமாக மாற்ற மத்திய அரசை வலியுறுத்தியும், அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை உடனடியாக திறக்க மாநில அரசை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் உட்பட 35 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.

