/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சியில் குப்பை வரியை குறையுங்கள்; முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கடிதம்

ADDED : டிச 19, 2025 06:27 AM
மதுரை: 'மதுரை மாநகராட்சியில் குப்பை வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மார்க்சிஸ்ட் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அக்கட்சியின் நகர் மாவட்ட செயலாளர் கணேசன் கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: மதுரை 2 வது தலைநகராக பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். இங்கு மக்கள் தொகை பெருக்கத்தால் போக்குவரத்து நெருக்கடி பெரும் சவாலாக மாறியுள்ளது. நெரிசலை குறைக்க ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பாலங்களை மறுசீரமைக்க வேண்டும். தேவையான உயர் மட்ட பாலங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ரயில்வே ஸ்டேஷன் கிழக்கு நுழைவுவாயில், டவுன்ஹால் ரோடு, பெரியார் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட், கோரிப் பாளையம், மாட்டுத்தாவணி, பழங்காநத்தம் பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.
பந்தல்குடி தவிர நகருக்குள் செல்லும் 10 கால்வாய்களை துார்வாரி இருபுறமும் சுவர் எழுப்ப வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் வளாக கடைகளை திறக்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் குப்பை வரி மாதம் ரூ. ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இது சென்னையில் ரூ.300, கோவையில் ரூ.500 மட்டுமே. மதுரையில் குப்பை வரியை குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.