/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தெப்பக்குளம் தண்ணீரை நன்னீராக்க நன்னாரி வேர், கல்வாழை மீனாட்சி கோயில் நிர்வாகம் புது முயற்சி

ADDED : டிச 19, 2025 06:38 AM

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பராமரிப்பில் உள்ள மாரியம்மன் தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீர் அசுத்தமாவதை தவிர்க்க இயற்கை முறையில் நன்னாரி வேர், கல்வாழை மிதக்கவிடப்பட்டுள்ளது.
ஆண்டு முழுவதும் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. வைகையாற்றில் இருந்து கழிவுகளுடன் வரும் தண்ணீர், தெப்பக்குளத்தில் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது.
அவ்வப்போது கோயில் நிர்வாகம் கழிவுகளை அகற்றி துர்நாற்றத்தை போக்கினாலும், மீண்டும் சேர்ந்து துர்நாற்றத்தை உருவாக்கி வந்தது. இதற்கு தீர்வுகாண கோயில் இணைகமிஷனர் சுரேஷ் முயற்சித்தார். சுற்றுச்சூழல் நிபுணர்கள் ஆலோசனைப்படி இயற்கை முறையில் தண்ணீரை ஆக்சிஜனேற்றம், துாய்மைப்படுத்துவதற்காக சுற்றிலும் மூங்கில் தொட்டி செய்து அதில் செம்மண்ணை நிரப்பி உள்ளே நன்னாரி வேர், கல்வாழை ஊன்றி மிதிக்க விடப்பட்டுள்ளது.
இதன்மூலம் ரசாயன நஞ்சுகளை உணவாக எடுத்துக்கொண்டு நன்மை செய்யும் திறன் கொண்டது கல்வாழை. அனைத்து நீர்நிலைகளிலும் இவ்வகை தாவரங்களை வைத்து தண்ணீரை நன்னீராக்க வேண்டும் என வைகை நதி மக்கள் இயக்க தலைவர் ராஜன் வலியுறுத்தியுள்ளார்.