ADDED : ஜூலை 25, 2025 03:31 AM
சோழவந்தான்: மன்னாடிமங்கலம் ஊராட்சி கண்ணுடையாள் புரத்தில் ரோடு ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் ரோடு அமைக்க வலியுறுத்தி விவசாய சங்கத் தலைவர் வேல்பாண்டி தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
இங்கு பல ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு செல்லும் 60 அடி அகலம், 3 கி.மீ., நீளமுடைய ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. அவற்றை அகற்றி வாகனங்கள் எளிதாக சென்றுவர தார் ரோடு அமைக்க மாவட்ட விவசாய சங்கத் தலைவர் வேல்பாண்டி வலியுறுத்தினார்.
அவரது தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் கந்தவேல், சின்னச்சாமி, செல்வகுமார், லோகநாதன் உட்பட பலர் மறியலில் ஈடுபட தயாராகினர். பி.டி.ஓ கிருஷ்ணவேணி, வி.ஏ.ஓ., வெங்கடேசன், ஊராட்சி செயலர் செந்தில்குமார், காடுபட்டி எஸ்.ஐ., கணேஷ் குமார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
பத்து நாட்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என அதிகாரிகள் கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.