/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேரூராட்சி தலைவரை குற்றம் சாட்டும் கவுன்சிலர் தி.மு.க.,வில் 'டிஷ்யூம்'
/
பேரூராட்சி தலைவரை குற்றம் சாட்டும் கவுன்சிலர் தி.மு.க.,வில் 'டிஷ்யூம்'
பேரூராட்சி தலைவரை குற்றம் சாட்டும் கவுன்சிலர் தி.மு.க.,வில் 'டிஷ்யூம்'
பேரூராட்சி தலைவரை குற்றம் சாட்டும் கவுன்சிலர் தி.மு.க.,வில் 'டிஷ்யூம்'
ADDED : ஜூலை 25, 2025 03:31 AM
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் பேரூராட்சி தலைவருக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலரே பஸ்ஸ்டாண்ட் கடை ஏலத்தில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டினார்.
அலங்காநல்லுார் பேரூராட்சி தலைவர் தி.மு.க.,வைச் சேர்ந்த ரேணுகா ஈஸ்வரி. இப்பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம் ஜன.12ல் திறக்கப்பட்டது. இங்குள்ள 16 கடைகளுக்கும் இன்று (ஜூலை 25ல்) ஏலம் நடக்கிறது. இந்த ஏலம் முறைப்படி நடக்காமல், நேரடி, மறைமுக ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலக வளாகத்தில் 11வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மஞ்சுளா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கவுன்சிலர் மஞ்சுளா கூறியதாவது: ஒரு கடைக்கு இரு ஏலம் எதற்கு. இதில் முறைகேடுக்கு வாய்ப்புள்ளது. பேரூராட்சி தலைவர், செயல் அலுவலர் , இளநிலை உதவியாளர் ஆகியோர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றாமல் ஏலம் விடப்படுகிறது.
நுாறுநாள் வேலை திட்டத்திலும் முறைகேடுகள் நடந்துள்ளதை, ஆதாரத்துடன் நிருபிக்க உள்ளோம் என்றார்.
பேரூராட்சி தலைவி ரேணுகா ஈஸ்வரி கூறுகையில், ''அரசு விதிகளுக்கு உட்பட்டு அதிகாரிகள் முன்னிலையில் நேரடி, மறைமுக ஏலம் விடப்படுகிறது. ஏலம் தொடர்பான நோட்டீஸை கவுன்சிலர் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்பே, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. முறைகேடு எதுவுமே நடக்கவில்லை என்றார்.