/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அஞ்சல் ஊழியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
/
அஞ்சல் ஊழியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 25, 2025 03:30 AM

மதுரை: மதுரை தல்லாகுளம் தலைமை தபால் அலுவலகத்தில் அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஐ.டி.சி., திட்டத்தை கைவிடுதல், இலக்கு நெருக்கடிகளை நிறுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோட்ட செயலாளர் முருகன் கூறியதாவது: பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. சுதந்திர விநியோக மையங்கள் (ஐ.டி.சி.,) முன்னோடி திட்டம் என்ற பெயரில் ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் செயல்படுகிறது. போஸ்ட் மேன்கள் கூடுதலாக 15 கி.மீ. மற்றும் அதற்கு மேலாக பணிக்கு செல்ல வேண்டும் என்றும் சொந்த இருசக்கர வாகனம், ஸ்மார்ட் போன் வைத்திருத்தல் அவசியம் என்றும் ஊழியர்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்கள். இதன் மூலம் மக்களும் அலைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
சென்னையில் இன்று மாநில அளவிலான போராட்டம் நடத்த இருக்கிறோம். இவ்வாறு கூறினார். அஞ்சல் 3 தலைவர் சாந்தி, செயலாளர் நாராயணன், அஞ்சல் 4 தலைவர் ராஜபாண்டியன், செயலாளர் முருகன், ஏ.ஐ.ஜி.டி.எஸ்.யு., கோட்டத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் பாஸ்கரன், நிர்வாகிகள் லுார்துமேரி, திருப்பதி, அனுஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.